புலந்த்சாகர் (உ.பி.) உத்தரப் பிரதேசம் புலந்த்சாகர் மாவட்டத்தில் பாஜக நிர்வாகி ராகுல் வால்மீகி ஒரு திருமணமான பெண்ணுடன் மயானத்தில் காரில் உல்லாசமாக இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கைலாவன் கிராமத்தில் நடந்த இந்த சம்பவத்தில், யாரும் வர மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இருவரும் சுடுகாட்டை தேர்வு செய்து காருக்குள் அரை நிர்வாண நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை சந்தேகித்துக் கண்காணித்த கிராம மக்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து வீடியோ எடுத்துள்ளனர். வீடியோவில் அந்த பெண் துப்பட்டாவால் முகத்தை மறைத்துக் கொண்டதுடன், ராகுல் வால்மீகி மன்னிப்பு கேட்டும் பொதுமக்கள் விட்டு விடாமல் அவர்களை நேரில் கண்டித்தனர்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியதையடுத்து, பாஜக தலைமையகம் ராகுல் வால்மீகியை கட்சியில் இருந்து உடனடியாக நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது வரை அதிகாரப்பூர்வ புகார் பெறப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதற்கு முன்பு, மத்தியப் பிரதேசத்தில் முன்னாள் பாஜக தலைவர் மனோகர்லால் தாக்கர் மீது இதேபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. கட்சியின் மதிப்பையும் நம்பிக்கையையும் சிதைக்கும் இத்தகைய சம்பவங்களுக்கு கடுமையான நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.