கோவை கண்ணப்பநகரில் மதுபோதையில், தன் 75 வயது மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த மருமகனை காவல்துறையினர் கைது செய்தனர்.கோவை, கண்ணப்பநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 51). மணிகண்டனுக்கு திருணமாகி 21 வயதில் மகன் உள்ளார். அவரின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.இதனால் மணிகண்டன் மது பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். மணிகண்டன் மகன் மற்றும் மாமியாருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் நேற்று முன்தினம் மது போதையில் வீட்டுக்கு சென்றுள்ளார்.அப்போது அவரின் 75 வயதான மாமியார் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.
மணிகண்டன் திடீரென வீட்டு கதவை பூட்டியுள்ளார். தொடர்ந்து தன் மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்.அதிர்ச்சியடைந்த மூதாட்டி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் கதவை உடைத்து மூதாட்டியை மீட்டுள்ளனர். இந்த தகவல் மணிகண்டனின் மகனுக்கு சொல்லப்பட்டது.ஆத்திரமடைந்த அவர் உடனடியாக வீட்டுக்கு சென்று, பொதுமக்களுடன் இணைந்து மணிகண்டனை தாக்கியுள்ளார். இதில் மணிகண்டன் பலத்த காயம் அடைந்துள்ளார். இதுகுறித்து மணிகண்டனால் பாதிக்கப்பட்ட மூதாட்டி, கோவை அனைத்து (மத்திய) மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். காயத்துக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணிகண்டணை காவல்துறையினர் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.