இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்!! திரையுலகம் இரங்கல்!!

Director Velu Prabhakaran passes away

சென்னை, ஜூலை 18, 2025 – தமிழ் திரையுலகின் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவரான வேலு பிரபாகரன் (68) உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமா உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இயக்குனர் வேலு பிரபாகரன், சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மாதம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று (ஜூலை 18) அதிகாலை 5.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்று அவரது மரணம் குறித்த வதந்திகள் பரவிய நிலையில், அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்து, அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகக் கூறியிருந்தனர். இருப்பினும், எதிர்பாராத விதமாக இன்று அதிகாலை அவர் இயற்கை எய்தினார்.

வேலு பிரபாகரன், 1980 ஆம் ஆண்டு ‘இவர்கள் வித்தியாசமானவர்கள்’ என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராகத் தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார். பின்னர், 1989 ஆம் ஆண்டு ‘நாளைய மனிதன்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ‘அசுரன்’, ‘ராஜாளி’, ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’, ‘காதல் கதை’ போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். அவரது படங்கள் வழக்கமான பாணியில் இருந்து விலகி, சமூகச் சிந்தனைகள் மற்றும் துணிச்சலான கருத்துக்களைப் பேசும் வகையில் அமைந்திருந்தன. சாதி, மத, பாலின ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அவரது வசனங்கள் பரவலாகப் பேசப்பட்டன.

பெரியாரின் தீவிர பக்தரான வேலு பிரபாகரன், தனது படங்களில் கடவுள் மற்றும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பல காட்சிகளையும், வசனங்களையும் தைரியமாகப் பதிவு செய்தவர். இயக்குனர் மட்டுமல்லாது, ‘கஜானா’, ‘வெப்பன்’, ‘ஜாங்கோ’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு முற்போக்கு சிந்தனையாளராகவும், தனிப்பட்ட கருத்துக்களை தைரியமாக வெளிப்படுத்தும் கலைஞராகவும் அவர் அறியப்பட்டார்.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram