எப்ஸ்டீன் ஃபைல், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் ஆகியோருக்கு எதிரான முதல் அஸ்திரம். டிரம்ப் மற்றும் எலான் மஸ்கிடையே சமீப காலமாக மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. மோதல் தொடர்ந்த நிலையில் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ட்ரம்ப் பற்றிய உண்மையை சொல்ல வேண்டும்.
அதிபரின் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பைலை பொதுவெளியில் வெளியிடுவதற்கு சரியான காரணம் இல்லை. வெளியிடாததுக்கு “ஹவ் எ நைஸ் டே DJT” காரணம் என குறிப்பிட்டுள்ளார். ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர். மேலும், குழந்தைகளை அரசியல்வாதிகள் மற்றும் பிசினஸ்மேன்கள் ஆகியவர்களுக்கு கடத்துபவர்.
கடந்த 17ஆம் தேதி அமெரிக்க அதிபரிடம் ஃபைல் குறித்து கேள்வி கேட்ட போது, முன்னாள் அதிபர் ஒபாமா, பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் இயக்குனர் ஜேம்ஸ் கேமியால் மற்றும் ஜோ பைடன் ஆகியோரால் எனக்கு எதிராக செய்யப்பட்ட ஆவணம் என்று பதிலளித்துள்ளார். மேலும், கடந்த 2024 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் எப்ஸ்டீன் பைலை வெளியிடுவேன் என உறுதி அளித்து இருந்தார்.
ஆனால், தற்போது தனக்கு எதிராக ஃபைல் தயாரிக்கப்பட்டுள்ளது என கூறுகிறார் என கருத்துக்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை ட்ரம்பின் பெயர் ஆவணத்தில் இடம் பெற்றிருக்கும் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எப்ஸ்டீனுக்கு பிறந்தநாள் கூறிய வாழ்த்து கடிதம் வெளியாகி உள்ளது.
இதனை “தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்” என்று அமெரிக்க நாளிதழ் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு பெண்ணின் அவுட்லைன் வரைந்த பேப்பரில் வாழ்த்து கடிதத்தை அச்சிட்ட அவரது கையெழுத்து இடம்பெற்றது வெளியிட்டுள்ளது. கிஸ்லைன் மேக்ஸ்வெல் எப்ஸ்டினின் கூட்டாளியாக உள்ளார் அவர்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ட்ரம் சமூக வலைதள பக்கத்தில் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நான் எழுதிய கடிதம் போலியான கடிதத்தை அச்சிட்டு வெளியிட்டுள்ளது என்றும், அதில் எழுதப்பட்ட வார்த்தைகள் என்னுடையது அல்ல என்றும், ரூபர்ட் முர்டோக்கி இதுபோன்ற போலி கடிதங்களை அச்சிடக் கூடாது என எச்சரித்தேன்.
ஆனால் அதையும் மீறி தன் மீது தவறான வதந்திகளை பரப்பி வருகிறார். மூன்றாம் தர செய்தித்தாள் மீது வழக்கு தொடர போகிறேன் என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.