ஆஸ்லோ: உலகில் பல்வேறு பகுதிகளில் வினோதமான சட்டங்கள் இருப்பதை பார்த்திருப்போம் ஆனால் இந்த நாட்டில் மட்டும் பிறப்பதற்கும் தடை இறப்பதற்கும் தடை ஆனால் மக்கள் தொகை மட்டும் ஏறிக்கொண்டே போகிறதாம். நார்வே நாட்டில் உயிரிழக்க தடை சட்டம் உள்ளது. ஆர்டிக் வட்டத்திற்குள் அமைந்துள்ள நார்வே நாட்டிற்கு சொந்தமான சொந்த தீவான ஸ்வால்பார்ட் அமைந்துள்ள நகரம் லாங்யர்பியன்.
லாங்கர் பி என் நகரில் உயிரிழக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இறப்பது என்பது சட்டத்திற்கு விரோதமானது என கருதப்படுகிறது. ஆன்மீகம் என்று நினைத்தால் அது தவறு இது அறிவியலுடன் தொடர்புடையது. உலகின் மிகவும் குளிரான இடங்களில் லாங்யர்பியன் ஒன்று. குளிரான நாட்களில் -46.3 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
வெப்பமான நாட்களில் அதிகபட்ச வெப்பம் 3–7 டிகிரி செல்சியஸ் தான். இத்தகைய சூழ்நிலையில் இறப்பது என்பது சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டுள்ளது லாங்யர்பியன் நகரில். குளிரான வானிலையால் நிலங்கள் உறைந்து காணப்படும். இறந்துவிட்டால் நிலங்களைத் தோண்டு கடினமாக இருக்கும் என்பதனால் இறப்பதற்கு தடை விதித்துள்ளது.
கடினமாக குழிகளை தோண்டி புதைத்தாலும் குளிர் நிலவுவதால் உடல் சிதைவடையாமல் அப்படியே இருக்கும். சாதாரண வெப்ப நிலையில் உடலை புதைத்ததால் சில நாட்களிலேயே உடல் சிதைந்து விடும். ஆனால் குளிர் பிரதேசங்களில் உடலை புதைப்பது என்பது பெரும் பிரச்சனை. பதப்படுத்தி வைப்பது போல அப்படியே இருக்கும்.
வைரஸ்கள் சுற்றுச்சூழலில் கலந்து ஆபத்து விளைவிக்கும் என்பதனால் 1950 ஆம் ஆண்டில் நார்வே அரசு உடலை புதைக்க கூடாது சட்டத்தை இயற்றியது . வயதான மக்களை நார்வே நாட்டின் பிரதான நிலப்பகுதிகளுக்கு 2000 கிலோ மீட்டர் தூரம் கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்த பின் புதைக்கப்படுவது வழக்கம்.
மேலும், குழந்தை பிறப்பதற்கும் அரசு ரீதியாக உத்தரவு பிறப்பிக்க படாவிட்டாலும் நிறைமாத கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே பிரதான தேசத்திற்கு சென்று விடுவர். பிரசவத்திற்கு பின் சொந்த நகரத்தை அடைவார்கள் என கூறப்படுகிறது.