நடிகராகவும் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர்தான் சசிகுமார். பொதுவாகவே இவர் கிராமத்து கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் விருப்பம் கொண்டவராக விளங்கி வருகிறார். ஆனால் சமீபகாலமாக இதற்கு எதிர்மறாக இருக்கக்கூடிய திரைப்படம் மற்றும் வெப் சீரிஸ் போன்றவற்றிலும் நடித்து வருகிறார்.
இயக்குனர் அவதாரம் எடுத்து அதன் பின் முழு நேரமாக நடிகராகவே பிஸியாக நடித்து வரக்கூடிய நடிகர் சசிகுமார் அவர்கள் திடீரென சென்னையில் இருந்து குடும்பத்துடன் காலி செய்து தங்களுடைய சொந்த ஊரான மதுரைக்கு அருகில் இருக்கக்கூடிய கிராமத்திற்கு சென்று விட்டார். இப்பொழுதெல்லாம் எங்கு பட சூட்டிங் நடந்தாலும் தன்னுடைய சொந்த ஊரிலிருந்து நேரடியாக படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம்.
இது குறித்த நடிகர் சசிகுமார் அவர்கள் கூறியிருக்கும் காரணம் பின் வருமாறு :-
திரைப்பட படப்பிடிப்பிற்காக மலையாள படத்தில் கலந்து கொண்ட சசிகுமார் அங்கு மலையாள நடிகர்கள் வாழ்க்கை முறையை கவனித்திருப்பதாகவும் அப்பொழுது தங்களுடைய சொந்த ஊரிலிருந்து தான் மலையாள நடிகர்கள் திரைப்படத்தில் நடிப்பதற்காக வந்து அதன்பின் மாலை அல்லது இரவு வேலைகளில் தங்களுடைய வீட்டிற்கு நேரடியாக சென்று சாதாரண வாழ்க்கை வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏன் சினிமாவில் நடிக்கிறோம் என்று ஆணவத்தை தலைகனத்தை தலையில் சுமந்து கொண்டு இருக்க வேண்டும் என முடிவெடுத்து தன்னுடைய சொந்த ஊருக்கே குடும்பத்துடன் சென்று விட்டதாகவும் சொந்த ஊரில் தன்னை அனைவரும் மாமன் மச்சான் என கூப்பிடுவதாகவும் யாரும் தன்னுடன் வந்து செல்பி எடுத்துக் கொள்ள நினைக்கவில்லை என்றும் சாதாரண மனிதனாகவே தன்னுடைய வாழ்க்கையை சினிமா நேரம் தவிர மற்ற நேரத்தில் கழிப்பதாகவும் இது தனக்கு நல்ல அமைதியான சூழலை கொடுப்பதாகவும் விளக்கியுள்ளார். மேலும் சினிமா வாழ்க்கை என்பது நிரந்தரம் இல்லை என்றும் சினிமாவில் இன்று ஒருவர் கோலோச்சினருக்கும் பட்சத்தில் சிறிது காலத்திலேயே அது மாற்றப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.