Cinema : தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய நடிகராக வலம் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பிரபல ஹீரோ நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் ஒரு முக்கிய ஹீரோ வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. சிவகார்த்திகேயனுக்கு கடைசியாக திரையரங்குகளில் அமரன் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று நூறாவது நாள் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து பெரிய திரைப் படங்களில் கமிட் ஆகி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் கடைசியில் விஜய் சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை புடிங்க சிவா எனக் கூறிய பின் தமிழ் சினிமாவில் அடுத்த விஜய் ஆக சிவகார்த்திகேயன் வருவார் என அனைவரும் பேசப்பட்டு வந்த நிலையில் மறுபுறம் கலாய்க்கவும் செய்தனர் இந்நிலையில் அந்த திரைப்படத்திற்கு பின் வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி சந்தித்தது.
இதனால் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த திரைப்படங்களின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மாபெரும் உச்சத்தை தொட்டுள்ளது எனவே கூறலாம். என் நிலையில் சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்தில் பிரபல ஹீரோவான நடிகர் ஆர்யா வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருக்கு தற்போது மிகப்பெரிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆர்யா மற்றும் சிவகார்த்திகேயன் இடையிலான திரைப்படம் எப்படி இருக்கிறது என மிகப் பெரிய எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது.