Cricket: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கில் அபார சதத்தை பதிவு செய்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் கில் சதம் விலாசி அபார் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய கேஎல் ராகுல் இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கில் நேற்றைய நாள் இறுதிவரை களத்தில் நின்று சதம் அடித்தார்.
அவர் 216 பந்துகளை எதிர் கொண்டு 114 ரன்கள் அடித்து விக்கெட்டை இழக்காமல் களத்தில் இருக்கிறார். தற்போது இந்திய அணி 310 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெடுகளை இழந்து ஜடேஜா மற்றும் கிரில் களத்தில் இருக்கின்றன. டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக பொறுப்பேற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலேயே தொடர்ந்து சதம் விலாசி சாதனை படைத்துள்ளார் கில் இதயத்தொடர்ந்து பல முக்கிய வீரர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றன இதுவரை அவர் ஏழு சதங்கள் அடித்துள்ளார்.