சென்னை: சென்னை ஈசிஆர் சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜிபி யூனிவர்சல் கிங்டம் எனப்படும் பொழுதுபோக்கு பூங்காவிற்கு தற்காலிக தடை அறிவித்துள்ளது நீலாங்கரை காவல் துறை. பொழுதுபோக்கு பூங்காவை தற்காலிகமாக திறக்க தடை விதித்துள்ளது. நேற்றைய தினம் (மே 27) டாப் கன் ராட்டினத்தில் 36 பேர் அந்தரத்தில் தொங்கிய நிகழ்வை அடுத்து போலீசார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள விஜிபி பொழுதுபோக்கு பூங்கா ஒன்றிற்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அத்துடன் அங்கு உள்ள சிலை மனிதனுடன் நின்று புகைப்படம் எடுத்தும், சாகச விளையாட்டுகள் விளையாடுவதுமாக பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் பூங்காவிற்கு ஏராளமான வந்துள்ளனர். பூங்காக்களில் விளையாடுவது நேரம் கழிப்பது என மகிழ்ந்து வருகின்றனர்.
இதையடுத்து மாலை 6:00 மணிக்கு மேல் டாப் 10 எனும் ராட்சத ராட்டினத்தில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 36 ஏறி உள்ளனர். டாப் கன் எனும் ராட்டினம் பல்டி அடிக்கும் விதத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ரைடு என்பதால் அதில் ஏறி அமர்ந்ததும் ஒரு சுற்று சுற்றியதும் அந்தரத்தில் நின்று விட்டது. அந்த ராட்டினம் ஆனது சுமார் 50 அடி உயரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் பயந்து அலற ஆரம்பித்தனர். அதை எடுத்து நிர்வாகம் சார்பில் மீட்டெடுக்க கிரேன் மூலம் முயற்சி செய்யப்பட்டது. கிரேனின் உயரம் குறைவாக இருந்ததால் அவர்களை மீட்க முடியவில்லை இதனால் மூன்று மணி நேரமாக அந்தரத்தின் பயணிகள் தவித்தனர்.
பின் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என அனைவரையும் மீட்டெடுத்தனர். இந்த சம்பவம் நடைபெற்று தாமதமாகவே போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் விஜிபி பூங்காவை திறக்க தற்காலிக தடை விதித்துள்ளது நீலாங்கரை காவல் துறை. மேலும், பொது மேலாளரிடம் வழங்கப்பட்ட நோட்டீசில் பழுதுக்கான காரணம் என்ன, காவல்துறைக்கு தாமதமாக தகவல் கொடுத்தது ஏன், ரெய்டுகளுக்கு அனுமதி ஆவணங்கள், மீட்க நிர்வாகம் தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது போன்ற கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.





