ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களை காவு வாங்கிய அரசு பேருந்து!!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சோலுடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னக்காளையின் மகன்கள் மலைச்செல்வன் (40) மற்றும் நெவுலியப்பன் (37) இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். வழக்கம்போல் இரவு நேர வேளையில் சுண்ணாம்பிருப்பு பகுதியில் சென்றபோது எதிரே வந்து கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் நெவுலியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மலைச்செல்வனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று பிறகு அவசரமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் அவருக்கு தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்தக் குடும்பத்தில் மட்டுமல்லாது, அவர்களது நண்பர்கள் மற்றும் ஊர்நிலைவாசிகளிடையிலும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினர் உருக்குலைந்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் காவல்துறை இன்ஸ்பெக்டர் தலைமையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து ஓட்டுனரை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். அவரது ஓட்டுநர் உரிமம், மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட விபரங்களை சேகரித்து, விபத்து காரணங்களைத் தெளிவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் வகையில் அரசின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது போன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram