சென்னை அம்பத்தூர் டீச்சர்ஸ் காலனி சேர்ந்த பேட்மிட்டன் பயிற்சியாளர் ஆன தினேஷ் பாபுவிற்கு திருமணமான நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தால் அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள பேட்மிட்டன் கிளப்பில் காலையும் மாலையும் தினேஷ் பாபு பயிற்சி அளித்து வருவதால் வழக்கம்போல கடந்த மாதம் 28ஆம் தேதி மாலை 3:45 மணியளவில் பேட்மிட்டன் பயிற்சிக்காக மோட்டார் பைக்கில் சென்றுள்ளார் அப்போது பேட்மிட்டன் கிளப் அருகே ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் தினேஷ் பாபுவை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் தலை முகம் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துள்ளார்.
உடனே அங்கிருந்தவர்கள் தினேஷ் பாபுவை ஆம்புலன்ஸ் மூலம் ஆவடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது தகவல் அறிந்த அம்பத்தூர் போலீசார் தினேஷ் பாபுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இதனைத் தொடர்ந்து செங்குன்ற உதவி ஆணையர் அலுவலகத்தில் தாங்கள்தான் தினேஷ் பாபுவை கொலை செய்ததாக மூன்று நபர்கள் சரணடைந்துள்ளனர் முதலில் இதன் பின்னணியில் யாரும் இல்லை என மூவரும் தெரிவித்த நிலையில் போலீசார் தங்களது பாதையில் நடத்திய தீவிர விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த 2019 ஆம் ஆண்டு தினேஷ் பாபு மாதவரம் பகுதியில் பேட்மிட்டன் கோச்சாக சென்றபோது அப்பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் செல்வராஜ் என்பவரின் மகளுடன் தினேஷ் பாபுவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது தினேஷ் பாபுவுக்கு திருமணம் ஆனது தெரிந்தும் அப்பெண் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு ஜாதி என்பதையும் ஏற்கனவே திருமணம் ஆகியதும் காரணம் காட்டி பெண் வீட்டார் மறுத்துள்ளனர்.
பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு அந்த இளம் பெண்ணுக்கு ஐடி ஊழியர் ஒருவருடன் திருமணமான சிறிது காலத்திலேயே அப்பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தால் அப்போது மீண்டும் தினேஷ் பாபு உடன் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளார் இதை அறிந்து ஆக்கிரமடைந்த பெண்ணின் தந்தை வழக்கறிஞர் செல்வராஜ் அன்னையில் தினேஷ் பாபுவின் வீடு புகுந்து தாக்கியதாக கூறப்படுகிறது இதன் பின்னரும் இருவரும் பழகி வந்ததால் மனம் உடைந்த செல்வராஜ் தனது சக வழக்கறிஞரும் திமுக பிரமுகருமான விஜயகுமாரிடம் தெரிவித்துள்ளார்.
ஏவி கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டு கொடுத்த விஜயகுமார் உதவிக்காக அதிமுக பிரமுகரான அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த தனஞ்செழியன் உதவியை நாடியுள்ளார் இதனைத் தொடர்ந்து தனஞ்செழியன் தனக்கு தெரிந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜவேலு மூலம் பத்து லட்ச ரூபாய் பேரம் பேசி கூலிப்படையை தயார் செய்து கொலையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது இந்நிலையில் தலைமறைவாக இருந்த இளம் பெண்ணின் தந்தை செல்வராஜ் அதிமுக பிரமுகர் தனஞ்செழியன் திமுக பிரமுகர் விஜயகுமார் வழக்கறிஞர் சதீஷ்குமார் மற்றும் சுஜித் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர் மேலும் இந்த கொலையில் இன்னும் சில முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்களையும் கைது செய்ய இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர் மேலும் கைதான இளம் பெண்ணின் தந்தை செல்வராஜ் சென்னை மாநகராட்சி 27வது வார்டு திமுக கவுன்சிலர் ரவிச்சந்திரனின் தம்பி என்பதும் அரசியல் செல்வாக்கின் காரணமாக சிலர் தப்புவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.





