கேரளா: உடல் எடை குறைப்பதற்காக யூடியூப் வீடியோக்களை பார்த்து டயட் மேற்கொண்டதால் இளம்பெண் உயிரிழப்பு.
தற்போதைய நடைமுறையில் உடல் எடை கூடுதலாக இருந்தால் கேலி கிண்டலுக்கு உள்ளாக்கப்படுவதுண்டு. முன்பெல்லாம் உடல் எடை மற்றும் உடல் பருமனை அவ்வளவு பெரிதாக கருத்தில் கொள்ள மாட்டார்கள் இயல்பாக இருந்து கொள்வது உண்டு. ஆனால் தற்போது நடைமுறையில் ஆண்களை கவர்வதற்கு பெண்களும் பெண்களை கவர்வதற்கு ஆண்களும் தனது உடலை மெல்லிடையாக மாற்றுவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஆண்கள் மற்றும் பெண்கள் ஜிம்மிற்கு சென்று சிக்ஸ் பேக் வைத்து உடலை கட்டுடல்மேனியாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்கு தேவையான சாப்பாடு தேவையான நீர் என்று ஒரு சில சாப்பாட்டுகள் மட்டுமே உண்ண வேண்டும் மற்றும் இவ்வளவு அளவு தான் உண்ண வேண்டும் என்று டயட் மேற்கொள்வதுண்டு. அவ்வாறு டயட் மேற்கொள்வதன் மூலம் உடல் பருமனை குறைக்க முடியும் ஆனால் அதனை சரியான மருத்துவ ஆலோசனையுடன் மேற்கொள்ள வேண்டும்.
அதுபோன்று கேரளாவில் ஒரு இளம் பெண் ஆன்லைன் டயட் வீடியோக்களை பார்த்து அதனை பின்பற்றி வந்த 18 வயது ஸ்ரீ நந்தா என்ற இளம் பெண் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல நாட்களாக அந்தப் பெண் சாப்பிடாமல் உடற்பயிற்சி செய்து வந்ததாகவும் தண்ணீர் உணவு வகைகளையே உட்கொண்டு வந்ததாகவும் உறவினர்கள் தகவல் அளித்துள்ளனர். மேலும் அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அந்தப் பெண்ணின் எடை 24 கிலோ மட்டுமே இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.