திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புள்ளரம்பாக்கம் பகுதியில் அஜய் என்ற வாலிபர் ஆவடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார் அவர் அவரது படிப்பையும் பாதியிலேயே நிறுத்தியுள்ளார். இவ்வாறு இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவர் நண்பர்களோடு இணைந்து கொடைக்கானலுக்கு சுற்றுப்பயணம் போவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார்.
மூன்று நாட்கள் ஆகிய பின் அதை தனது தாய்க்கு அழைத்து என்னிடம் சுத்தமாக காசு இல்லை 1500 அனுப்பினால் நான் திரும்பி வந்து விடுவேன் என்று கூறியுள்ளார். அவர்களும் அந்த பணத்தை அனுப்பி வைத்துள்ளனர் ஆனால் அன்றே அஜய் தன்னுடைய அக்காவுக்கு அழைத்து சில வட இந்தியர்கள் தன்னைப் பிடித்து பணத்திற்காக மிரட்டி வெட்டுவதாக அலறி துடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பயந்து புள்ளரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் அஜயின் அந்த மொபைல் எண்ணிற்கு அழைத்து பணம் கொடுப்பதாகவும் கூறியுள்ளனர். அதன் பிறகு சிறிது நேரத்தில் அஜயின் மொபைலில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், அஜய் கஞ்சாவிற்கு அடிமையானதாகவும் கஞ்சா வாங்குவதற்காக அஜய் மற்றும் அபினேஷ் இருவரும் ஓடிஸாவுக்கு ரயிலில் சென்றதாகவும் கூறப்படுகிறது.
அப்போது ஒடிசாவில் தேவையான கஞ்சாவை வாங்கிக்கொண்டு ரயில் பாதையில் நடந்து வந்த போது அங்கு திடீரென ஐந்து பேர் கொண்ட மருமகம்பல் இவர்கள் இருவரையும் துரத்தி உள்ளனர். அப்போது அங்கிருந்து அபினேஷ் தப்பிக்கவே அஜய் சிக்கி உள்ளார். அஜய் குடும்பத்திற்கு அழைத்து ஐந்து லட்சம் பணம் வேண்டும் என மிரட்டி உள்ளனர் அதன்பின் இருபதாயிரம் கொடுத்தால் போதும் எனவும் கூறியுள்ளனர். மேலும் பணம் கொடுக்க வேண்டாம் என காவல்துறை கூறி ஒடிசாவுக்கு தேடிச்சென்றுள்ளனர். ஆனால் அங்கு ஏற்கனவே அஜயை கொலை செய்து அந்த மர்ம கும்பல் தப்பி சென்று விட்டது. இதனால் காவல்துறை தீவிர விசாரணையில் களமிறங்கி உள்ளது.