திருமணஞ்சேரி கோவில் திருமணம் ஆகாத வாலிபர்களும் மற்றும் திருமணமாகாத கன்னிப் பெண்களும் வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு திருமண பேரினை தந்து அருளும் தலம் தான் திருமணஞ்சேரி. ஈசனின் இடப்பக்கத்தில் என் நாளும் இருக்கும் இறைவி அவளுக்கு திடீரென்று தன் தலைவனை மற்றொரு முறை மணம் புரிந்து கொள்ள வேண்டும் என ஒரு ஆசை வந்தது. அதனால் ஈசன் ஈசனிடம் அவன் கழுத்தில் மாங்கல்ய மாலை மற்றொரு முறை சூட்ட வேண்டும் என்று இறைவி கேட்டு கொண்டாள். ஈசன் பொன்முருவலுடன் பதில் அளிக்காது அம்பிகைக்கு ஏமாற்றமாக இருந்தது. பின்பு லிங்கத்தின் மீது பாலை பொழிந்து தனது குலம்பால் அவனை தீண்டினாள் பாலாபிஷேகமும் குலம்பு ஸ்பரிசமும் சிவபெருமானின் உள்ளத்தை ஈர்த்து மற்றொரு முறை தேவியை மனம் புரிந்து கொண்டார் திருமணஞ்சேரியில் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி உயர்ந்துள்ளது.
அவற்றை கடந்து சென்ற பின் வழிபடும் மகாநந்தி மண்டபம் உள்ளது. இவற்றை வணங்கி விட்டு உள்ளே நுழைந்தால் வரசித்தி விநாயகர் உள்ளார். கருவறையில் உத்வாகநாதர் என்னும் அருளால் லிங்க வடிவில் அப்பன் எழுந்துள்ளார்.
நடன மண்டபத்தில் ஆனந்த தாண்டவம் இடம் நடராஜரையும் தரிசித்துவிட்டு அவருக்கு எதிரே திருமண கோலத்தில் கல்யாண சுந்தரரும் உமா தேவியும் நித்திய அலங்கார தம்பதியாக அருள அருள் அளிக்கின்றனர்.
திருமண பேரறுக்காக கன்னிகள் வந்து வேண்டிக் கொள்வது இந்த கல்யாண தம்பதியிடம் தான். வேண்டுதல் நிறைவேறி நன்றி பிரார்த்தனை செலுத்தும் வகையில் மனைவியும் கணவன் இணைந்து திருமண பேறு வேண்டுதலுடன். கோவிலுக்கு எவ்வாறு வருவது: வருபவர்கள் காலையில் குளித்துவிட்டு புதிய ஆடை உடுத்தி திருமணஞ்சேரி கோவிலுக்கு புறப்பட வேண்டும்.
உள்ளூர் மற்றும் எளிதில் வரக்கூடிய தொலைவில் இருக்கும் கன்னிப் பெண்கள் வீட்டில் உள்ள தன் அம்மாவுடன் அழைத்துச் செல்வது நல்லது தொலைவில் இருந்து வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் பெண்கள் தாயார் வரவிட்டாலும் உறவினர் அல்லது நண்பர்களுடன் வரலாம் வரும்போது சுமங்கலி பெண் ஒருவரை துணைக்கு அழைத்து வரவேண்டும்.
பூஜைக்கு தேவையான பொருட்கள் : மஞ்சள் குங்குமம் கற்பூரம் ஊதுவத்தி சர்க்கரை தீப எண்ணெய் வெற்றிலை பாக்கு வாழைப்பழம் இரண்டு எலுமிச்சம் பழம் மூன்று தேங்காய் மூன்று மாலைகள் உதிர்ந்த பூக்கள் சந்தனம் ஆகியவற்றை கொண்டு வந்து அர்ச்சகர் இடம் கொடுக்க வேண்டும். இவற்றை வாங்கித் தருவது மிகவும் நல்லது..
அர்ச்சகர் உமையாள் சமேத கல்யாண சுந்தரருக்கு நீங்கள் கொடுத்ததை பூஜை பொருட்களாக வைத்து அர்ச்சனை செய்வார் பூஜை முடிந்து போகும் போது அர்ச்சகர் திருமண பேறு வேண்டுதலுடன் வந்திருக்கும் பெண்களிடம் அல்லது ஆண்களிடம் இரண்டு மாலைகள் கொடுத்து அனுப்புவர் அந்த மாலையை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
பிறகு திருமணம் ஆகிய பின்பு பிரார்த்தனை செலுத்த வரும்போது மணமகளும் மணமகனும் அம் மாலையுடன் இணைந்து வரவேண்டும் இவ்வாறு மாலை பெற்று சென்றவர்களின் பெரும்பாலானோர் அந்த மாலைகள் முற்றிலுமாக வாடுவதற்குள் திருமணம் ஆகி திருமணஞ்சேரி கோவிலுக்கு வருகின்றனர்.
திருமணஞ்சேரி வந்து ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரையும் உமையவளையும் வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு கூட திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர சந்தனம் கிட்டுகிறது..
திருமணஞ்சேரி மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது.
தரிசன நேரம் காலை ஆறு 6.30 முதல் பகல் 12.30 வரை மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை மட்டுமே உள்ளது.