Kango: ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோவில் 53 பேர் ரத்த வாந்தி எடுத்து மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கோவில் பரவி வரும் நோய்க்காக உலக சுகாதார அமைப்பு பிப்ரவரி 10 முதல் 16 க்கான செய்தி அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்த நோய்க்கான எச்சரிக்கையை வெளியிட்டு இருந்தது. ஆனாலும் அங்கு இந்த மர்ம நோய் காட்டுத்தீ போல பரவி இதுவரை 431 பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முக்கியமானதாக நிறைய பேர் அறிகுறி தென்பட்ட இரண்டு நாட்களில் மரணம் அடைந்து விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த நோயானது வவ்வால் கறியால் பரவி இருக்கலாம். ஏனெனில் இங்கு முதலில் மூன்று சிறுவர்கள் வவ்வால் கறி சாப்பிட்ட பின் இந்த நோய் இருந்தது கண்டறியப்பட்டது. அதனால் இதன் மூலமாக இந்த நோய் பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது. உலக சுகாதார மையத்தின் அறிக்கையின்படி வவ்வால் கறி சாப்பிட்டு மூன்று சிறுவர்கள் சாப்பிட்ட இரண்டு நாட்களுக்குள் இரத்த கசிவு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு இறந்துள்ளனர். இவர்கள் மூலமாகத்தான் இந்த நோய் பரவி இருக்கும், மேலும் இது அந்த பகுதியில் மொத்தம் 13 பேருக்கு ஏற்பட்டு இப்போது 400 ஆக மாறியுள்ளது.
இதன் அறிகுறியை பார்க்கும்போது சளி இருமல் மற்றும் தலைவலி காய்ச்சல் தும்மல் வாசனை இழப்பு சுவை இழப்பு போன்ற அறிஞர்கள் ஏற்படும் இது சாதாரண காய்ச்சல் போல் இல்லாமல் இதோடு ரத்த வாந்தியும் ஏற்படுவது தான் இந்த நோய்க்கான அறிகுறி இதனால் மற்ற காய்ச்சல் போல் இல்லாமல் ரத்த வாந்தி எடுப்பதனால் இந்த நோய்க்கான காரணம் மர்மமாகவே இருந்து வருகிறது என கூறப்படுகிறது.