Gaza : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது காசாவில் உள்ள பொது மக்களை வெளியேற்றி அந்த நகரை கைப்பற்றுதில் தீவிரமாக உள்ளார்.
கடந்த ஓராண்டுக்கு மேல் பாலஸ்தீன காசா மற்றும் இஸ்ரேல் இடையிலான ஊர் தொறந்து நடந்து வருகிறது. தற்போது தான் அந்தப் போரானது அமைதி நிலைக்கு திரும்பி உள்ளது இருதரப்புக்கும் இடையில் ஒரு ஒப்பந்தத்தின் பேரில் இந்த போரானது முடிவுக்கு வந்தது. இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் மற்றும் நெதன்யாவோ இருவரும் வெள்ளை மாலையில் சந்தித்தனர் அப்போது காசாவை பற்றி இருவருமே பேசும்பொழுது டொனால்ட் டிரம்ப் காசா மக்கள் வெளியேற்றி காசாவை அமெரிக்கா கைப்பற்றும் என கூறியது அங்குள்ள மக்கள் மற்றும் இஸ்லாமிய நாடுகளை அதிர வைத்தது.
மேலும் மக்களை வெளியேற்றி அங்கு உள்ள கழிவுகளையும் அகற்றப்பட்டு வீடுகளும் புதியதாக கட்டிக் கொடுக்கப்படும் வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்படும் அதன் பின் அனைத்து மக்களும் அங்கு வாழும் படி ஏற்பாடு செய்வதாக டிரம்ப் கூறியிருந்தார். மேலும் அவர் வேறொரு பேட்டியில் கூறுவதாக கூறப்பட்ட ஒரு விஷயம் என்னவென்றால் காசாவே அமெரிக்கா கைப்பற்றிய பின்பு காசாமக்களுக்கு அங்கு இடமில்லை என்று கூறியதாகவும், காசாவில் இருந்து வெளியேறும் மக்களை எகிப்து மற்றும் ஜோடன் நாடுகள் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதற்கு எகிப்து மற்ற நாடுகளும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக அவர்கள் காஜா மக்களை வெளியேற்றாமல் அங்கேயே வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அதனை ட்ரம்ப் ஏற்றுக்கொள்ளவில்லை. மொத்தமாக ட்ரம்ப் காசாவை கைப்பற்றுவதில் உறுதியாக இருக்கிறார்.
இதனால் காசா மக்களின் மறுவாழ்வுக்கு உதவி செய்ய அரபு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று சவுதி அரேபியா கத்தார் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று இந்திய மதிப்பில் 4.61 லட்சம் கோடி செலவில் மக்களை வெளியேற்றாமல் கழிவுகளை அகற்றி வீடு கட்டி தர முடிவு செய்துள்ளனர். இதனால் டிரம்ப் மற்றும் அரபு நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடு இருப்பதால் காஜா விவகாரத்தில் அரபு நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே மோதல் வெடிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.