•° தமிழகம் மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் பல பக்தர்கள் இக்கோயிலை வழிபாடு செய்கின்றனர்.
•°800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் மேச்சேரியில் உள்ளது. •°இக்கோயிலின் பிரதான வாசல் வடக்கு நோக்கியும் கம்பீரத்துடனும் காட்சியளிக்கிறது.
•°இந்த கோயிலை சுற்றி நான்கு திசைகளிலும் நான்கு வகையான கோபுரங்களும் உள்ளன வடக்கு நோக்கி ராஜகோபுரத்தை அடுத்து வசந்த மண்டபம உள்ளது.
•° இந்த கோவிலின் மண்டபத்தில் நடுவில் நின்று தரிசனம் செய்தால் ராஜகோபுரத்தையும் மூலவர் விமானத்தையும் பத்ரகாளியம்மனையும் ஒரு சேர தரிசனம் செய்யலாம். இந்த மாதிரி தமிழகத்தில் வேறு எந்த இடங்களிலும் இல்லாத தனி சிறப்பாகும்.
•°இவ்வாறு தரிசனம் செய்வதால் முப்பெரும் தேவிகளின் ஆசிர்வாதமும் காளியின் சக்தியையும் நமக்கு கிடைக்கும் •°மனநோய் பாதித்தவர்கள் ஒரு மண்டலம் வந்து வழிபட்டால் நோய் தீரும் என்கிறார்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை தீர்க்க பக்தர்கள் இக்கோயிலின் விபூதியை பெற்று செல்கின்றனர்.
•° அதேபோன்று பக்தர்கள் புதிய தொழில்கள் தொடங்குவதற்கும் திருமணம்,நிலம் வாங்குதல் மற்றும் சுப காரியங்களுக்கு இங்கு வந்து பூ வாக்கு கேட்டு அதன்படி செயல்படுகின்றனர்கள்.
•°ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. ஐப்பசி தீபாவளி அம்மாவாசை அன்று குருபூஜை நடைபெறுகிறது அமாவாசையில் நடைபெறும் சிறப்பு பூஜை மற்றும் அம்மன் அலங்காரத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்தால் நினைத்தது நடப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
•°மேலும் பாவ தோஷங்கள் ஏவல் பில்லி சூனியம் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் ராகு கேது தோஷங்கள் திருமண தடைகள் குழந்தை பேறின்மை ஆகியவைகளுக்கு ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால் பிரச்சனைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
•°21 தலைமுறை பாவங்கள் நீக்கும் என்று பக்தர்கள் கூறுகிறார்கள் சேலம் மாவட்டம் மேச்சேரியில் மிகவும் சக்தி வாய்ந்த பத்ரகாளி அம்மன் கோவில் அமைந்துள்ளது இங்கு அருள்மிகு பத்ரகாளியம்மன் தரிசனம் செய்வதால் 21 தலைமுறை செய்த பாவங்கள் நோய்கள் நம்மை விட்டு நீங்கும் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.