பெரம்பலூர்: கேரளத்தை பூர்வீகமாக கொண்ட ரகு என்பவர் சென்னையில் வசித்து வருகிறார். அவர் மாந்திரீகம் செய்யும் தொழிலை செய்து வருகிறார். மேலும் youtube சேனல் ஒன்றை தொடங்கி அதில் மாந்திரீகம் செய்யும் செய்முறையை வீடியோவாக சேனலில் ஒளிபரப்பு செய்து நிறைய நபர்களிடம் பணம் வசூலித்து மாந்திரீகம் செய்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவர் இவர் வீடியோவை youtupe பார்த்து ஒருவரை மாந்திரீகம் செய்து கொலை செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இவர் அதற்கு மாந்திரீகம் செய்து கொள்வதற்கு 21 லட்சம் ரூபாய் செலவாகும் என்று கூறியுள்ளார்.
அதற்கான நபர் 21 லட்சம் ரூபாயையும் ரகுவின் அக்கவுண்டிற்கு அனுப்பியுள்ளார். இதைப் போலவே மேலும் பல பேரிடம் பொய்களை சொல்லி பல குடும்பங்களிடம் மோசடி செய்து மாந்திரீகம் என்ற பெயரில் நாடகம் நடத்திக் கொண்டு வந்துள்ளார். நவீன உலகத்தில் விஞ்ஞானம் வளர்ந்து விண்வெளிக்குச் சென்ற போதும் சில மக்களை இவர்களைப் போன்றோர் பொய்களை பேசி மாந்திரீகம் என்ற பெயரில் ஏமாற்றி வருகின்றனர்.
குறிப்பாக கடவுள் நம்பிக்கை இருப்பவர்களை குறி வைத்து இவர் ஏமாற்றி உள்ளார். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் துறை மங்கலத்தில் சேர்ந்த ரமேஷ் இவரை தொடர்பு கொண்டு அதே பகுதியில் வாழும் முரசொலி மாறன் என்பவரை மாந்திரீகம் செய்து கொலை செய்ய ரகுவை தொடர்பு கொண்டுள்ளார். இதை அறிந்த முரசொலி மாறன் என்பவர் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து காவல் அதிகாரிகள் ரகு மற்றும் ரமேஷிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் ரமேஷ் இடமிருந்து 21 லட்சம் ரூபாய் கூகுள் பிளே மூலம் வாங்கியதும் முரசொலி மாறன் மீது மாந்திரீகம் செய்ததும் விசாரணை மூலம் தெரிய வந்தது. பின்னர் இவர்கள் இருவரையும் பெரம்பலூர் சிறையில் அடைத்தனர்.உலகில் உண்மையை நம்பி வாழ்பவர்களை விட பொய்களை நம்பி ஏமாந்தவர்களே அதிகம்.