TVK: இன்று திருவான்மியூரில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் ஆதவ் அர்ஜுனா பேச்சு.
தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் என்று திருவான்மியூரில் தற்போது நடைபெற்று வருகிறது முக்கிய பொறுப்பாளர்கள் விழாவில் பங்கு பெற்று விழாவை சிறப்பித்து வருகின்றனர். மேலும் இந்த முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ஆதார் அர்ஜுனா உங்கள் கட்சிக்கு பூத் கமிட்டி என்பதே இல்லை அதற்குள் என் கட்சியை பார்த்து என் தலைவரை பார்த்து என்ன ஒரு பெண்களை நோக்கிய விமர்சனம்.
இதை நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இந்த பெண்களை நோக்கிய விமர்சனத்துக்காக நீங்கள் தூக்கி எறியப்படுகப்படுவீர்கள். எங்கள் தலைவர் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார் எங்களது இலக்கு திமுக மற்றும் பிஜேபியை புறக்கணிப்பது எங்கள் இலக்கு நேராக இருக்கிறது.
திமுக அவர்களை செட் செய்து குழப்பமாக ஜாதி பிரச்சனை கட்சிக்குள் குழப்பம் என உருவாக்குகிறது. எங்களுக்குள் எந்த ஜாதியும் கிடையாது ஜாதி உருவாக்கியது நீங்கள் தான் 70 வருடமாக திமுக தான் ஜாதியை உருவாக்கி தேர்தலில் அதை வைத்து போட்டிட்டு வருகிறீர்கள். நான் அங்கிருந்து தான் வேலை பார்த்து வருகிறேன் எனக்கு தெரியும் அங்கு தான் ஜாதி இருக்கிறது. எம் ஜி ஆர் இதை அறிந்து தான் கட்சியை விட்டு வெளியேறினார் அவரும் வெளியேறி வெற்றி பெற்றார் அவர் சொன்னதையும் செய்தார் என்று ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.