புகார் அளித்த 1 மணி நேரத்தில் நடவடிக்கை!! களம் இறங்கும் புதிய ஆப்!! சூடு பிடிக்கும் தேர்தல்!!

தேர்தல் அதிகாரியின் கடும் எச்சரிக்கை சி-விஜில் செயலி மூலம் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் அல்லது ஏதேனும் சலுகைகள் வழங்கப்படுவது குறித்து பொதுமக்கள் உடனடியாக புகார் அளிக்கலாம், அந்த புகாரின் மீது ஒரு மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை நிர்வாகி ஜவஹர் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

மொத்தம் 1099 வாக்குச்சாவடிகளில் சுமார் 5000 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 10 கம்பெனி தொழில் பாதுகாப்புப் படைகளும், 4000 போலீசாரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முறையற்ற தேர்தல் விளம்பரங்களைத் தடுக்க தனி கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவுவதை கண்காணிக்க மெய்ப்பொருள் என்ற செயலியும் பயன்படுத்தப்பட உள்ளது. தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் வெளிப்படையாக நடைபெற அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்க ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வீல் சேர் மற்றும் தன்னார்வலர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் 30 சிறப்பு வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் தொடர்பான புகார்களுக்கு 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும், வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் அனுமதி இன்றி எந்தவித தேர்தல் விளம்பரமும் செய்யக்கூடாது அப்படி விதிமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. தேர்தல் நெருங்க உள்ள நிலையில் இந்த அறிவிப்பு தேர்தல் நேர்மையாக நடைபெறும் என்ற நம்பிக்கை மக்களிடையே உருவாகியுள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram