பெங்களூரு: கன்னட தொலைக்காட்சியில் வெளியான காமெடி கலாட்டா நிகழ்ச்சி ஒன்றின் மூலம் பிரபலமானவர் நடிகர் சஞ்சு பசய்யா. திரைப்பட நடிகையான இவரது மனைவி பல்லவி. பெலகாவி மாவட்டத்திலுள்ள பைலஒங்கலா பகுதியில் வசித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக விஜய நகரை சேர்ந்த மனோஜ் என்ற வாலிபர் நடிகர் சஞ்சீவ் மனைவி பல்லவிக்கு இன்ஸ்டாகிராமில் குறுந்தகவல்களை அனுப்பி வந்துள்ளார். மேலும், நடிகை பல்லவிக்கு ஆபாச குறுந்தகவல் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார்.
இது குறித்து தனது கணவர் சஞ்சு பசய்யாவிடம் பல்லவி கூறியுள்ளார். உடனே பைலஒங்கலா பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் மனோஜ் மீது புகார் அளித்தார். வழக்குப்பதிவு பேரில் விசாரித்த போலீசார் instagram கணக்கை வைத்து மனோஜ் என்ற வாலிபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டது குறித்து நடிகர் சஞ்சுவிற்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து காவல் நிலையம் சென்ற சஞ்சு போலீசாரிடம் வழக்கை திரும்ப பெறுவதாக கூறியுள்ளார். மேலும், மனோஜ் என்ற வாலிபரை விடுவிக்கும் படியும் கோரிக்கை வைத்துள்ளார்.
பின் போலீசார் மனோஜ் விடுவித்தனர். மனோஜிடம் பேசிய சஞ்சு பசய்யா, ஆபாச குறுந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்களை யாருக்கும் அனுப்பக் கூடாது என்றும், இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் மனோஜை எச்சரிக்கை செய்தார்.
மேலும், இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் சஞ்சு. இவரின் இந்த வீடியோ ஆனது தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அவரை தண்டிக்காமல் எச்சரிக்கை விடுத்தது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளம் மூலமாக பலரும் பாராட்டி வருகின்றனர்.