முதலில் படத்தில் நடிக்க வைப்பதற்கே தயங்கிய தயாரிப்பாளர் எம்ஜிஆர் உடன் நடிக்கப் போகிறார் என தெரிந்தவுடன் அவருக்கு 1 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்து படத்தில் நடிக்க வைத்த சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்துள்ளது. யார் அந்த நடிகை ? அப்படி என்ன அவருடைய நடிப்பில் இருக்கிறது என அனைத்தையும் இந்த தொகுப்பில் காணலாம்.
திருடாதே படத்தின் தயாரிப்பாளரான ஏ எல் ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு சரோஜா தேவியை தன்னுடைய படத்தல் நடிக்க வைப்பதற்கு அதிக தயக்கம் இருந்துள்ளது. இதை கவனித்த நடிகர் எம் ஜி ஆர் தயாரிப்பாளரிடம் சென்று இந்தப் பெண்ணை தான் என்னுடைய நாடோடி மன்னன் திரைப்படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளேன் என தெரிவித்தவுடன், தன்னுடைய அனைத்து தயக்கத்தையும் உதறி தள்ளிவிட்டு நடிகை சரோஜாதேவியை திருடாதே வெளிப்படுத்தல் நடிக்க வைத்திருக்கிறார் தயாரிப்பாளர்.
நாட்டை ஆண்டது முதல் சினிமா உலகை ஆண்டது என அனைத்திலும் முதல்வராகவும் முக்கியமானவராகவும் கருதப்பட்டவர் நடிகர் எம் ஜி ஆர். இவர் கூறிய ஒரு வார்த்தையால் தன் தயக்கம் மொத்தத்தையும் தெரிந்து சரோஜா தேவியை திருடாதே திரைப்படத்தில் நடிக்க வைத்ததோடு மட்டுமல்லாது அது திரைப்படத்தை வெற்றியடையவும் செய்திருக்கின்றனர்.
முதலில் இந்த திரைப்படத்தில் வரை நடிக்க வைப்பதற்காக சரோஜா தேவியின் அம்மாவிடம் சென்று பேசப்பட்டு இருக்கிறது. எம்ஜிஆரின் திரைப்படத்தில் சரோஜாதேவி நடித்த இருக்கிறார் என்றும் அதற்கான சம்பளம் 5000 மட்டும்தான் என தெரிவித்த உடன் வேறு வழி இன்றி சம்பளத்தை உயர்த்தி கேட்க மனம் இல்லாமல் தயக்கத்தோடு சரோஜாதேவியின் தாயார் திரைப்படத்தில் நடிக்க வைக்க ஒப்பு கொண்டிருக்கிறார்.