உருட்டுக்களும் திரட்டுகளும்.. திமுக-வின் பொய்களைத் தோலுரிக்க அதிமுக-வின் புதிய கேம்பெய்ன்!! தேர்தல் களம் ரெடி!

அதிமுக பிரச்சாரம், உருட்டுக்களும் திரட்டுகளும், இபிஎஸ், திமுக பொய் வாக்குறுதி, 2026 சட்டமன்றத் தேர்தல்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் மீது வெறும் வாய்மொழி விமர்சனங்களை மட்டும் வைக்காமல், அதனை ஒரு தொடர் பிரச்சாரமாகவே மாற்றியுள்ளார். “உருட்டுக்களும் திரட்டுகளும்” (Lies and Deceit) என்ற பெயரில் அதிமுகவினர் தற்போது ஒரு நூதன பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

இதில் திமுக கொடுத்த 528 வாக்குறுதிகளில் எவையெல்லாம் இன்னும் காகிதத்திலேயே இருக்கின்றன என்பதைத் தரவுகளுடன் மக்களிடம் கொண்டு செல்கின்றனர்.

“திமுக ஆட்சியில் அறிவிப்புகள் மட்டுமே கவர்ச்சியாக இருக்கின்றன, ஆனால் களத்தில் எதுவும் நடக்கவில்லை” என்பதுதான் அதிமுக-வின் பிரதான முழக்கம். மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்ற சுமைதான் மக்களுக்குக் கிடைத்துள்ளது என இபிஎஸ் சுட்டிக்காட்டுகிறார்.

குறிப்பாக, மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்திலும் பல கட்டுப்பாடுகளை விதித்து தகுதியான பலரைப் புறக்கணித்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக-வின் ‘வெற்றி முழக்கம்’ என்பது அவர்களது வாக்குறுதிகள் சார்ந்துதான் இருக்கும். அதனை இப்போதே உடைக்க வேண்டும் என்பது அதிமுக-வின் திட்டம். இந்த “வாக்குறுதி யுத்தம்” வரும் நாட்களில் இன்னும் தீவிரமடையும் எனத் தெரிகிறது. இபிஎஸ்-ஸின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு திமுக அமைச்சர்கள் என்ன பதிலடி கொடுக்கப் போகிறார்கள் என்பதைத் தமிழக மக்கள் ஆவலோடு கவனித்து வருகின்றனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram