தொடரும் அட்வான்ஸ் மோசடிகள்!! வாடகைதாரர்களே உஷாராக இருங்கள்!!

பெங்களூரில் ஒரு வாடகை வீட்டு உரிமையாளர், வாடகைதாரரிடம் பெற்ற ரூ. 1,50,000 அட்வான்ஸிலிருந்து வெறும் ரூ. 68,000 மட்டுமே திருப்பிக் கொடுத்ததாக தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட வாடகைதாரர் இந்த தகவலை இணையத்தில் பகிர்ந்ததும், பலரும் அந்த வீட்டு உரிமையாளரின் மீது கடும் விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.

வீட்டு வாடகைதாரர் கூறியதாவது, “நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன் வீடு வாடகைக்கு எடுத்தோம். அந்த நேரத்தில் ரூ. 1.5 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தோம். வீடு சிறப்பாக பராமரிக்கப்பட்டது. ஆனால் வீடு காலியாக்கும் போது உரிமையாளர் பல காரணங்களை கூறி சீர்மையாக்கம், பெயிண்ட், நஷ்டம் ஆகியவற்றைக் காரணமாகக் காட்டி, வெறும் ரூ. 68,000 தான் திருப்பிக் கொடுத்தார்.” இந்த விவகாரம் இணையத்தில் வெளியான பிறகு, இது போன்ற மோசடிகள் பெங்களூரில் மட்டுமல்லாமல், சென்னையிலும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சமூக வலைதள பயனர்கள் கூறுகின்றனர். சிலர் இது போன்ற மோசடியை சட்டபூர்வமாக எதிர்கொள்வதற்கு வழி செய்ய வேண்டும் எனக் கோருகின்றனர். இந்த சம்பவம் குறித்து X (முன்னாள் ட்விட்டர்), ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பெரும் ஆவேசப் போக்கு நிலவுகிறது. “#RentScam”, “#AdvanceFraud”, “#TenantRights” போன்ற hashtag தற்போது வைரலாக பரவி வருகின்றன. பலருக்கு இதுபோன்ற நிலைமைகள் தொடர்ந்து நிகழ்வதை காட்டிலும், வாடகை ஒப்பந்தங்களில் நியாயமான விதிமுறைகள் மற்றும் சட்ட பாதுகாப்புகள் இருந்தால், இது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும் எனக் கூறுகின்றனர்.

இந்நிலையில், வாடகைதாரர்கள் அட்வான்ஸ் தொகை கொடுக்கும் முன் பின்வரும் விசயங்களை கவனிக்க வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்:

1. உரிமையாளருடன் எழுத்துப் பூர்வ ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

2. ஒப்பந்தத்தில் அட்வான்ஸ் தொகையின் முழு விவரம், திருப்பித் தரும் விதிமுறைகள், பின் செலவுகள் ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

3. வீடு காலியாக்கும் போது வீட்டு நிலைமையின் புகைப்படம் அல்லது வீடியோ ஆதாரங்களை வைத்திருக்க வேண்டும்.

4. கட்டாயமாகக் கிடைத்த தொகை மற்றும் செலுத்திய தொகைக்கான ரசீது அல்லது வங்கி பரிவர்த்தனை ஆதாரங்கள் பாதுகாத்திருக்க வேண்டும்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram