புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட் ஆலோசகர் பாலியல் உறவு வைத்துக் கொள்வதற்கு வயது வரம்பை 16 ஆக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மற்றும் நிபுன் சக்சேனா ஆகியோருக்கு இடையில் வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டுக்கு உதவுவதற்க்கு மூத்த பெண் வக்கீல் இந்திரா ஜெய்சிங் நியமிக்கப்பட்டு இருந்தார்.
எழுத்துப்பூர்வமாக தனது கருத்துக்களை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் இந்திரா ஜெய்சிங். மனுவில் கூறப்பட்டதாவது, பரஸ்பர சம்மதத்துடன் பாலியல் உறவுக்கு வயது வரம்பு 70 ஆண்டுகளாக 16 ஆக இருந்தது. ஆனால் 2013 இல் இருந்து குற்றவியல் திருத்த சட்டத்தின்படி 16 ஆக இருந்த வயது வரம்பு 18 ஆக உயர்த்தப்பட்டது.
எந்தவித விவாதமும் நடத்தப்படாமல் நீதிபதி வர்மா கமிட்டியின் பரிந்துரைகளுக்கு எதிராக 16 இல் இருந்து 18 வயதாக உயர்த்தப்பட்டது. தற்போது தங்களது விருப்பத்திற்கு ஏற்ப காதல் மற்றும் பாலியல் உறவை தீர்மானிக்கும் திறனை பெற்றுள்ளதால் பாலியல் உறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில் சுதந்திரம் முதிர்ச்சி மற்றும் திறன் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் பாலியல் உறவு பாலியல் குற்றமாக தற்போதைய சட்டம் கருதுகிறது.
தேசிய குடும்ப சுகாதார ஆய்வு மற்றும் அறிவியல் சமூக புள்ளி விவரத்தின்படி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 வரை, 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட வயதினர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் இருந்த வழக்குகளில் 180 % அதிகரித்துள்ளது.
போக்சோ வழக்குகளில் பெரும்பாலான புகார்கள் சம்பந்தப்பட்ட சிறுமிகளின் விருப்பமின்றி மாற்று ஜாதி மற்றும் மதம் ஆகியவற்றின் அடிப்படையில் பெற்றோரால் அளிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வயதினர் பாலியல் உறவை குற்றம் ஆக்குவது அவர்களின் ஓடிப்போவது அல்லது சட்ட சிக்கலில் மாட்டிக் கொள்ள வழி வகுக்கிறது.
பாலியல் சுதந்திரம் என்பது மனித கவுரவத்தின் அங்கம் என கருதுகின்றனர். உடல் தொடர்பாக விருப்பங்களை தானே முடிவெடுக்க இளம் வயதினருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அரசியல் சாசனத்தின் படி 14, 15, 19, 21 ஆகிய பிரிவுகளில் மீறிய செயலாக குறிப்பிடப்படுகிறது என அவர் மனு தாக்கலில் தெரிவித்து இருந்தார்.
பாலியல் உறவுக்கான வயது வரம்பு 18 க்கும் கீழ் இருக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் 18 இருந்து குறைப்பது என்பது சாத்தியமில்லை என சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக கூறியுள்ளது. அதன்படி சட்டத்தின் கீழ் பாலியல் உறவுக்கான வயது வரம்பு 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.