அதிமுக வானது ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு பிளவு கொண்டது. இதில் எடப்பாடி ஒரு பக்கமும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா தினகரன் இணைந்து ஓர் அணியுமாக தோன்றினர். இதனைத் தொடர்ந்து பாஜகவின் கூட்டணியையும் முறித்துக் கொண்டதால் தொடர்ந்து வரும் பல தேர்தல்களில் தோல்வியை சந்தித்தது. தற்பொழுது தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க முயற்சித்து தொடர்ந்து ஆலோசனையில் மட்டுமே அது இருக்கிறது. எப்படி இருக்கையில் மீண்டும் எடப்பாடி சசிகலா மற்றும் ஓபிஎஸ் உடன் கூட்டணி வைத்துக் கொண்டால் மீண்டும் கட்சியை கொண்டு வந்து விடலாம் ஆட்சியையும் கைப்படுத்தலாம் என்று கோரிக்கையை அதிமுகவின் சீனியர் சிட்டிசன் வைத்து வருகின்றனர். ஆனால் முதற்கட்டத்தில் இதனை பொருட்படுத்தாத எடப்பாடி தற்பொழுது இதனை யோசிக்க ஆரம்பித்துள்ளாராம். சட்டமன்றத் தேர்தல் நம் கைவசம் வரவேண்டும் என்றால் இவர்கள் கூட்டணி கட்டாயம் தேவை என்பதை உணர்ந்துள்ளாராம். இது ரீதியான தகவலை அதிமுகவின் முக்கிய புள்ளி வெளியிட்டுள்ளது. அதன்படி சசிகலாவிற்கு அதிமுகவில் முக்கிய பதவி கொடுக்கப்பட்டு கூட்டணியில் இணைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இது ரீதியான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார்.
