AIADMK: முற்றும் மோதல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பிரச்சனை அதிமுக வில் என்னதான் நடக்கிறது. திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கியதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவை புறக்கணித்த அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் உலாவுக்கான அழைப்புகளை எம்ஜிஆர் ஜெயலலிதா படங்கள் இல்லாததால் பங்கேற்கவில்லை என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது அந்த நிகழ்ச்சி சார்ந்தது இல்லை என்பதால் எம்ஜிஆர் ஜெயலலிதா படங்கள் வைக்கப்படவில்லை என்று விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதற்குப் பிறகு திடீரென செங்கோட்டையன் வீட்டிற்கு படையெடுத்து வந்த அவரது தொண்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகளுடன் காணொளி கலந்தாய்வுக் கூட்டமும் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் நடந்தது இந்த நிகழ்வில் செங்கோட்டையில் கடைசி வரை பேசவே இல்லை என கூறப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது கோவையில் நடந்த எஸ்பி வேலுமணி இல்ல திருமண விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதை தவிர்த்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையில் திருமண சுபம் முன்னரே மணமக்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து விட்டு கிளம்பி சென்றார் கோவை விமான நிலையத்தில் விஐபி அறையின் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் சிறிது நேரம் உரையாடினர் இந்த விஷயங்கள் அனைத்தும் அதிமுக வட்டத்தில் வெறும் பேச்சு பொருளாக அமைந்துள்ளது.