ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி விமான பயணத்திற்கான டிக்கெட் விலை குறைத்துள்ளது . இது விமானத்தில் குறைந்த செலவில் பயணிக்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு சலுகையாக ஃபிளாஷ் விற்பனை முறையை அறிவித்துள்ளது அதன்படி உள்நாட்டு விமானங்களுக்கான கட்டணம் வெறும் ரூ.1250 முதல் ஆரம்பமாகிறது. மேலும் வெளிநாடு செல்வதற்கான விமான கட்டணத்திற்கான முன்பதிவு ரூ.6131 முதல் ஆரம்பமாகிறது. அதேபோல் வேல்யூ கட்டணம் ரூ.1375 முதல் ஆரம்பம் ஆகிறது.
இதற்கான டிக்கெட் முன் பதிவினை இணையதளம் மொபைல் செயலி மற்றும் பிற முன்பதிவு தளங்களில் பதிவு செய்யலாம் என ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு சலுகையின் மூலம் சர்வதேச வழித்தடங்களில் எக்ஸ்பிரஸ் லைட்டிங் விமான கட்டணம் ரூ.6131 முதல் தொடங்கும் என தெரிவித்துள்ளது. எக்ஸ்பிரஸ் வேல்யூ டிக்கெட் சலுகை ரூ.6288 ஆக உள்ளது.
எக்ஸ்பிரஸ் கிளாசிக் ஆனா டிக்கெட் சலுகை ரூ 7038 ஆக உள்ளது. இந்த வெளிநாட்டு விமானங்களுக்கான சிறப்பு சலுகைகள் ஆகஸ்ட் 6,12 மற்றும் 20 ஆகிய தேதிகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும்,airindiaexpress.com என்ற வலைதள பக்கத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என் அறிவித்துள்ளது. முன்பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்று கிலோ வரை கூடுதல் கட்டணம் இல்லாமல் முன் பகுதியில் லக்கேஜ் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களில் 20 கிலோ லக்கேஜ் க்கு ரூ.1,300 கூடுதலாக செலுத்த வேண்டும் மற்றும் உள்நாட்டு விமானங்களில் 15 கிலோ லக்கேஜ் க்கு ரூ.1000 கூடுதலாகவும் செலுத்த வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற சிறப்பு சலுகைகள் பண்டிகை காலங்களில் அறிவிப்பது தான் வழக்கம்.வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இப்படிப்பட்ட சலுகைகளை அவ்வப்போது அறிவிக்கிறது.
மேலும்,போட்டி நிறுவனங்களுடன் போட்டியை பலப்படுத்தவும் சில சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. இதுபோன்ற சலுகைகள் குறைந்த செலவில் பயணி விமானத்தில் பயணிக்கலாம் என்று விரும்புவோருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என ஏர் இந்திய நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.