ஏர் இந்தியா விமானத்தின் விபத்துக்கான காரணம் என்ன ? 100 ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!! 

Air India flight crash death toll crosses 100!!
அகமதாபாத் : குஜராத் , அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல்  விமான நிலையத்திலிருந்து லண்டனை நோக்கி சென்ற ஏர் இந்தியா போயிங் 787-8  விமானம் இன்று மதியம் 1.38 மணிக்கு சென்றது. சென்ற ஒரு சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியது. விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பிஜே மருத்துவ கல்லூரியின் விடுதியின் மீது விமானம் தீப்பற்றி எரிந்து நொறுங்கியது.
இந்நிலையில் இங்கிலாந்து நிபுணர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. அதன்படி ஏர் இந்திய விமானத்தில் 242 பேர் பயணித்ததாக கூறப்பட்டுள்ளது. அதில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் என 242 பேர் மற்றும் முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி போன்றோர்  சென்றுள்ளனர்.
 இதில் பயணம் செய்தவர்களில் இதுவரை 170 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இங்கிலாந்து நிபுணர் கூறுகையில், “விபத்துக்கான காரணம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும், முதல் கட்ட பரிசோதனையில்  இந்த விபத்து ஆச்சரியத்தை தருவதாகவும், இன்ஜினில் கோளாறு ஏற்பட்டிருந்தால் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டிருக்கும்.
மேல் நோக்கி சென்ற உடன்  தீப்பற்றியது அதிர்ச்சியளிக்கிறது எனவும், 650 அடிக்கு மேல் பறக்கவில்லை. மேலும், 200 மீட்டர் வரை மட்டுமே  பறந்தது.விமான கோளாறுமுன்பாக கண்டறியபட்டிறிந்தால் உடனடியாக நிறுத்தப்பட்டிருக்கும். இந்த அளவுக்கு தீவிரமாகும் நிலைக்கு போயிருக்காது. இத்தனை உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்காது” என கூறியுள்ளார்.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram