விமான விபத்தை தொடர்ந்து அடுத்ததாக விமானம் மிரட்டல்!! குழம்பிப்போன ஏர் இந்தியா நிறுவனம்!!

நேற்று நடந்த விமான விபத்து அகில உலகத்தையே உலுக்கியிருந்தது. குஜராத் முன்னாள் முதல்வர் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அந்த விபத்தில் பலியாகி இருந்தனர். இதனை அடுத்து ஏர் இந்தியாவின் தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு விபத்து குறித்து ஆராய்ந்து வருகின்றனர். அந்த துயரம் துளியும் நீங்காத வகையில் இன்று மற்றொரு விமான மிரட்டல் அரங்கேறி உள்ளது. இதனால் ஏர் இந்தியா நிறுவனம் முழுவதும் கதி கலங்கி உள்ளது.

தாய்லாந்தின் புகெட் தீவிலிருந்து, இந்தியாவிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மிரட்டல் காரணமாக அவசர அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. விமானத்தின் கழிப்பறையில் துண்டு சீட்டில் இந்த மிரட்டல் கடிதம் இருந்துள்ளது. ரிஸ்க் எடுக்க முடியாத காரணத்தினால் பாதுகாப்பு கருதி உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் வேகமாக வெளியேற்றப்பட்டு, விமானம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதன்பின் தான் அந்த மிரட்டல் தவறானது என்று தெரியவந்துள்ளது. இதனால் ஏர் இந்தியா நிறுவனம் முழுவதும் பரபரப்பாக உள்ளது. மேலும் பாதுகாப்பு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையில் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது. விமான விபத்து குறித்து வல்லுனர்கள் கூறுவதை கொண்டு செயல்பட உள்ளது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram