கீவ்: உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போர் தொடங்கி மூன்று ஆண்டுகளை கடந்து தொடர்ந்து வந்த நிலையில் இன்று சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது ரஷ்யா. இதுவரை ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நடந்த போரில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர்.
போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. பல்வேறு தரப்பில் நடந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா மற்றும் முத்திரை நடத்திய நேரடி பேச்சுவார்த்தை எந்த பலனளிக்காமல் தோல்வியடைந்தது.
இந்நிலையில் மீண்டும் போர் தொடர்ந்து உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா இன்று திடீரென தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் சப்போரியா மாகாண பிலன்கிஸ்கா நகரில் சிறைச்சாலையை ஒன்று அமைந்துள்ளது.
ரஷ்ய சிறைச்சாலை மீது திடீரென வான்வழி தாக்குதலை நடத்தியது. ட்ரோன்கள் மூலம் சிறைச்சாலையில் குண்டு மழை பொழிந்து உள்ளது. இந்த திடீர் தாக்குதலில் சிறை கைதிகள் உள்ளிட்ட 17 பேர் பலியாகினர். மேலும், இந்த தாக்குதலில் 80 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த வான்வழி தாக்குதலுக்கான எந்த ஒரு பதிலையும் அறிவிக்கவில்லை.