திருப்புவனம் மடப்புரம் கோயிலின் காவலாளி நிகிதா என்பவரின் புகார் அடிப்படையில் அவர் விசாரணை என்கிற பெயரில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் அவரை படுமோசமாக மிரட்டிய வீடியோ ஒன்று அவரின் குடும்பத்தாரால் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி சமூக வலைத்தளங்களில் பெரும் பரவலாக பரவி காட்டுத்தீயை ஏற்படுத்தியுள்ளது. இதில் அரசியலும் களம் இறங்கி அவர்கள் குடும்பத்திற்கு நன்கொடை ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் போன உயிர் போனது தானே. அவரை அடிக்கும் வீடியோவை படம் பிடித்த நபர் போலீசாரிடம் தனக்கு பாதுகாப்பு வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், வழக்கு கொடுத்த நிகிதா மீது பல திருட்டு வழக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆலம்பட்டி சேர்ந்த முத்துக்கொடி என்பவரிடம் சத்துணவு வேலை வாங்கித் தருவதாக இரண்டரை லட்சம் மோசடி செய்துள்ளார். திருமங்கலத்தைச் சார்ந்த ராஜாங்கத்திடம் 11 லட்சம் மோசடி செய்துள்ளார். அதே ஊரை சேர்ந்த தெய்வம் என்பவரிடம் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி ஒன்பது லட்சம் மோசடி செய்துள்ளார். மேலும் அங்கு உள்ள வினோத்குமார் என்பவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ஏழு லட்சம் மோசடி செய்துள்ளார். அரசு வேலை வாங்கித் தருவதாக செல்வம் என்பவரிடமும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். மொத்தமாக 28 லட்சத்துக்கு மேல் ஏமாற்றியதாக புகார் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இவர் செய்த தெரியாத திருட்டுகள் என்னவோ? இவரின் புகாரின் அடிப்படையில் ஒரு உயிரே பறிபோகி உள்ளது. என்ன ஒரு அவலம்!


