கடந்த இரண்டு வருடங்களாக அஜித் நடிப்பில் திரைப்படம் எதுவும் வெளிவராத நிலையில், சமீபத்தில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் அவரை கைவிட்டு இருந்தது. கோலிவுட் மார்க்கெட்டில் தற்போது முன்னணி நடிகர்கள் குறிப்பிட்ட நபர்களே உள்ளனர். அதில் முக்கியமான ஒருவர் அஜித். அவருக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. விடாமுயற்சியை தொடர்ந்து அவரது நடிப்பில் குட் பேட் அக்லீ திரைப்படம் வெளியாக உள்ளது. இது அவரது கெரியரை மீண்டும் நிலை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது முழு கவனமும் ரேஸிங் குறித்து இருப்பதால் அவர் மார்க்கெட்டில் பின்தங்கியுள்ளார். எனினும், ரேசிங்கை வெற்றிகரமாக முடித்து மீண்டும் விட்ட களத்தை பிடிப்பார் என்று அவரது ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில், அவரது ரசிகர்கள் குட் பேட் அக்லீ படத்தின் டிரைலர் பார்த்ததிலிருந்து பெரிதும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், இதனை தொடர்ந்து அவர் தனுஷின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளதாக ஒரு பேச்சு உலா வந்திருந்தது. அது குறித்து எந்த ஒரு நம்பகத்தக்க தகவலும் வெளிப்படவில்லை.
சிறுத்தை சிவாவும், அஜித்துடன் இணைந்து ஒரு படம் பண்ண போவதாக ஒரு டாக் உலா வருகிறது. இந்நிலையில், GBU பட இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் அவரது விருப்ப ஹீரோவான அஜித் உடன் மீண்டும் இணைந்து ஒரு புது படம் எடுக்கப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது. குட் பேட் அக்லீ(GBU) படத்தை இவர்தான் இயக்கியுள்ளார். இதன் வெற்றியை பொறுத்து தான் அடுத்த படம் குறித்து அஜித் முடிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.