நடிகர் அஜித் மிக பிரபலமான தமிழ் நடிகர். அவர் கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்கின்ற ஒரு திரைப்படத்தை நடித்துக் கொடுத்திருந்தார். இது பெரும்பாலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சில எதிர்மறையான விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டு இருந்தது. இதற்கு மேல் தான் ரேசில் போக்கஸ் செய்ய உள்ளதாக ஷார்ட் பிரேக் எடுத்துள்ளார். ஏற்கனவே இவரை போல விஜயும் தனது கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக அரசியல் களப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
நடிகர் அஜித் ரசிகர்கள் இவர் சில ஆண்டுகளாகவே தொடர்ந்து படம் நடிக்கவில்லை என்ற வருத்தத்தில் இருந்து வந்தார்கள். மேலும் அதற்கு தகுந்தார் போல் அவர்களை விமர்சிக்கும் வகையில் ட்ரெண்டிங் ரீல்சும் வெளியாகி இருந்தது. இதனை அடுத்த குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி இருந்தாலும் தற்சமயம் மீண்டும் பிரேக்கில் உள்ளார். இந்நிலையில் இவருடைய அடுத்த படம் குறித்த விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. கடைசியாக இவரை வைத்து படம் இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனே அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இவர் நடிக்க உள்ள திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸின் ராகுல் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. மேலும் அடுத்தடுத்து இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகின்றது.