Cricket: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறக்கப்பட்ட ஆகாஷ் தீப் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அபார சாதனையை படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி. அதுவும் சாதாரண வெற்றி அல்ல 336 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் இரண்டாவது போட்டியில் களம் இறக்கப்பட்ட ஆகாஷ் தீப்.
இவர் முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளும் இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகள் என மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசுர சாதனை செய்துள்ளார். இங்கிலாந்தின் முக்கிய வீரர்களின் விக்கெடுகளை வீழ்த்தி அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி உள்ளார். இவர் இரண்டாவது போட்டியில் இடம் பிடித்த போது அணியில் அர்ஷ்தீப் சிங் தான் இடம்பெற்று இருக்க வேண்டும் ஆனால் இவர் எப்படி இடம் பிடித்தார் என விமர்சனத்திற்கு உள்ளானார்.
ஆனால் அந்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் 21 வருடங்களுக்குப் பிறகு SENA நாடுகளில் ஒரே டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஆகாஷ் தீப். இதன் மூலம் இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து அணியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.