Cricket: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேத பந்துவீச்சாளர் ஆகாஷ் டீப் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார் இதன் மூலம் இந்திய அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றது இது குறித்து உருக்கமாக பேசிய ஆகாஷ் தீப்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தொடரில் மொத்தம் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் இரண்டு போட்டியில் முடிந்த நிலையில் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது இரண்டாவது போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பதிவு செய்துள்ளது.
இரண்டாவது போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கேப்டன் கில் மற்றும் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப். ஏனெனில் கேப்டன் கில் 430 ரன்கள் ஒரே போட்டிகள் அடித்து அபார பேட்டிங்கை வெளிப்படுத்தி இந்தியனின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். மற்றொரு முனையில் இரண்டு இன்னிங்ஸில் சேர்த்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தி மற்றொரு முக்கிய காரணமாக ஆகாஷ் தீப்பின் பந்துவீச்சு அமைந்தது.
இதுகுறித்து பேசிய ஆகாஷ் டீப் எனது சகோதரி கடந்த இரண்டு மாதங்களாகவே புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார் அவர் தற்போது என்னுடைய ஆட்டத்தை பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டு இருப்பார் இந்த வெற்றியை அவருக்கு தான் நான் சமர்ப்பிக்க விரும்புகிறேன். அவர் இரண்டாவது போட்டியில் மொத்தம் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.