சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் திருடி உள்ளதாக அவரை போலீசார் அழைத்துச் சென்று வழக்கு பதிவிட்டு விசாரித்துள்ளனர். அஜித் குமார் தான் கோயிலின் பின்புறத்தில் நகையை வைத்திருப்பதாக கூறி பொதுமக்கள் இடையே யாராவது நம்மை காப்பாற்ற மாட்டார்களா என்ற முன்னிடத்தில் போலீசாரை அங்கு கூட்டி சென்றுள்ளார். பொதுமக்களை அறையில் அண்ட விடாத போலீசார் அவரை தனியே மாட்டிக்கொட்டகை அருகே கூட்டி சென்றுள்ளனர். அங்கு அவர் நகை தேடி பார்த்த பின் கிடைக்கவில்லை என்ற போது அஜித்குமார் என்கிற காவலாளியை போலீசார் சாட்டையால் அடிக்கும் வீடியோ தற்போது அவரது குடும்ப உறுப்பினர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக அஜித்குமார் விசாரணையில் இறந்து விட்டதாக போலீசார் தெரிவிக்கும் போது, விசாரிக்க கூட்டி செல்லும்போது அவர் தடுக்கி விழுந்து வலிப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார் என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அவர்கள் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ பல அதிர்வல்களையும், மக்கள் மத்தியில் மன பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது. போலீசார் அவரை வன்மையாக கண்டித்து உள்ளார்கள் என்பது இந்த வீடியோ மூலம் தெரிய வருகிறது. மேலும் இதனால் அஜித் குமாரின் குடும்பத்தினர் பெரும் கோபத்தில் உள்ளனர். வீடியோ வெளியிடும் முன்னரே சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வீடியோ பார்த்த பிறகு நீதிபதிகள் என்ன தீர்ப்பு வழங்குவார்கள் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.