வாஷிங்டன்: உக்ரைனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா கடந்த 2022 இல் தாக்குதலை ஆரம்பித்தது. ரஷ்யா தொடக்கத்தில் முக்கிய நகரங்களை கைப்பற்றினாலும் பின் மீண்டும் உக்ரைன் கைப்பற்றியது.
கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து ரஷ்யா மற்றும் உக்ரையின் இடையிலான தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உக்ரைனுக்கு ஜெர்மனி மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ரஷ்யாவுக்கு வடகொரியா ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை ஆதரவாக அனுப்பி உதவி வருகிறது. இதுவரை இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். லட்சத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் ரஷ்யா உக்ரைன் போர் முடிவுக்கு வரவில்லை. ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்திய போதும் போர் நிறுத்தம் முடிவுக்கு வரவில்லை.
வெள்ளை மாளிகையின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அதிபர் ட்ரம்ப் , அமெரிக்கா உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் முதற்கட்டத்தில் தற்காப்புக்கான ஆயுதங்களை வழங்க உள்ளோம் என்றும் கூறினார். மேலும், உக்ரைன் மிக மிக கடுமையாக தாக்கப்பட்டு உள்ளது என்றும், புதின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியற்று காணப்படுகிறேன் என்றும் கூறியுள்ளார் ட்ரம்ப்.
ரஷ்யாவுக்கு எதிராக போர் மேலும் தீவிரம் அடைந்தால் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை பல்வேறு நாடுகளில் பாதிக்கப்படும்.