இஸ்ரேலை தூண்டி விட்ட அமெரிக்கா..அசால்ட்டாக டீல் செய்யும் மசூத்!!

America provoked Israel.
டெஹ்ரான்: ஈரான் மீது அணுசக்தி செயல்பாட்டை கைவிடவில்லை என்று இஸ்ரேல் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளது. அணுசக்தி விஷயம் தொடர்பாக அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஈரான் அதிபர் நடத்தப்பட்ட நிலையில் இஸ்ரேல் அவசரப்பட்டதால் அமெரிக்காவால் போருக்குள் வர முடியாமல் இருக்கிறது. இந்நிலையில் இரண்டு தரப்பினரையும் அசால்டாக சமாளிக்கிறார் அதிபர் மசூத் பெசெஷ்கியான். இவரது பயணமானது அடிப்படையில் ஓர் இதய சிகிச்சை நிபுணராக இருந்தாலும் சுகாதாரத்துறை அமைச்சராகவும், பின் நாடாளுமன்றத்தில் உறுப்பினராகவும், துணை சபாநாயகர் ஆகவும் இருந்திருக்கிறார் மசூத்.
துப்பாக்கி ஏந்திய வீரராகவும் மசூத் செயல்பட்டுள்ளார். இவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் அரசியலில் நுழைந்தார். கடந்த ஆண்டில் அதிபராக இருந்த இப்ராஹீம் ரைஸ் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்துள்ளார். அவரைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு ஈரானின் 9 வது அதிபராக மசூத் தற்போது பதவி வகிக்கிறார். தன்னை சீர்திருத்தவாதி மற்றும் நடுநிலைவாதி என்று சொல்லிக் கொள்ளும் இவர் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
“ஈரான் மீது போடப்பட்டிருக்கும் பொருளாதார தடைகளை நான் நீக்குவேன். மேலும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்” என்று சொல்லித்தான் தேர்தலில் வெற்றி பெற்றார். அமெரிக்காவை பகைத்துக் கொண்டு தொழில் செய்ய முடியாத நிலையில் , இஸ்ரேலின் பகையையும் தாங்கிக்கொள்ள முடியாது. மேலும், ஈரானின் சொந்த அணுசக்தி  வளர்ச்சியை விட்டுக் கொடுக்கவும் தயாராக இல்லாததால் அமெரிக்காவை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது.
பேச்சுவார்த்தை ஆனது தற்போது வரை நடந்து கொண்டிருக்கும் நிலையில் போர் மூண்டுள்ளது. பேச்சுவார்த்தைக்காக எல்லா வகையிலும் இழுத்தடித்தார் மசூத். அதனை பொறுத்து பார்த்த அமெரிக்கா இஸ்ரேலை தூண்டிவிட்டு ஈரான் மீது ஒப்பந்த வலையில் விழுமாறு எதிர்பார்த்தது அமெரிக்கா. ஆனால், ஈரானுக்கு பதில் இஸ்ரேல் வலையில் விழுந்து விட்டது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் செய்த அட்டகாசத்தை பொறுக்க முடியாமல் ஈரான் தாக்குதலை நடத்தியதனால் சர்வதேச அளவில் அவர் பெயரை ஏற்படுத்தியது.
பதில் தாக்குதல் நடத்துவதால் ஈரானுக்கு உலக நாடுகளின் ஆதரவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும், இஸ்ரேலை பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதல் நடத்தியது முக்கியமாக அமெரிக்கா இந்த பஞ்சாயத்தில் வர முடியாதவாறு நிலையை ஏற்படுத்தியது ஈரான். அணுசக்தி பயன்பாட்டை சர்வதேச ஒப்புதலுடன் மேம்படுத்துவதற்காக நகர்த்தி வருகிறார் மசூத். 
Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram