2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் தேர்தல் வியூகங்கள் மற்றும் பங்களிப்பு ஆகியவற்றை கலந்தலோசித்து வந்திருந்தனர். இந்நிலையில் தற்சமயம் பாஜகவும் 2026 தேர்தலை எதிர் நோக்கி களம் காண அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதற்கு முன்னர் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுடன் தேர்தல் வியூகம் குறித்தும், தேர்தல் களம் காண முன்னேற்பாடுகள் குறித்தும் மத்திய அமைச்சர் அமித்ஷா வழிமுறைகள் எடுத்துரைத்ததாக ஏற்கனவே தகவல் பகிரப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து தற்சமயம் மேலும் வியூக பணிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசலிக்க ஜூன் இரண்டாம் வாரம் பாஜக தமிழக மாநில கூட்டம் மதுரையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதனை தலைமை வகிப்பதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா வருகின்ற ஜூன் 8-ம் தேதி மதுரைக்கு வருகை புரிகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டமானது மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டம் முற்றிலும் 2026 சட்டமன்ற தேர்தல் களம் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும், மேலும் சட்டமன்றத் தேர்தலின் களம் காண்பதற்கான தொகை ஒதுக்கீடு குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது. இது தமிழக பாஜக வின் அடுத்த கட்ட நகர்விற்கு பெரும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சர் வருகைக்காக அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் வழி செய்ய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டமன்ற உறுப்பினர்களிடம் சிறந்த ஏற்பாடுகளை செய்ய எடுத்து உரைத்துள்ளார்.