யாத்ரீகர்கள் மீது தாக்குதலா? வான்வழி பயணம் தடை!! உளவுத்துறை எச்சரிக்கை!! 

An attack on pilgrims? Intelligence Alert!!
ஜம்மு காஷ்மீர்: அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி கூடுதல் பாதுகாப்புக்காக உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தியதில் சுற்றுலா பயணிகள் 24 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஆக்கிரமிப்பு பகுதிகளான பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது.
இந்தியாவின் தாக்குதலை கண்டு பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்ததிலிருந்து தற்காலிகமாக போர் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் நாட்களில் பனி லிங்கத்தை தரிசிக்க போவதற்கான அமர்நாத் யாத்திரை தொடங்க உள்ளது. பனி லிங்கத்தை தரிசிக்க நாள்தோறும் 30,000 மேற்பட்ட யாத்திரிகர்கள் வந்து செல்வது வழக்கம். யாத்திரிகர்கள் பயணமாக பல்டால் என்ற பாதையையும், பஹல்காம் பாதையையும் பயன்படுத்தி புனித குகையை சென்றடைவார்கள். புனித யாத்திரையின் போது லஷ்கர் அல்லது லஷ்கரின் ஆதரவு படையினர்களால் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
பிர் பஞ்சால் காட்டில் இருந்து தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சிஆர்பிஎப் படை அதிகாரிகள் ஆகியோர் முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கூடுதல் பாதுகாப்பு ரோந்து பணிக்காக உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக யாத்திரை செல்லும் பகுதிகளில் வான்வழி பயணத்தை தடை செய்வதாக கூறப்படுகிறது.
பயங்கரவாத தாக்குதலை அடுத்து வான்வழி பயணத்தை இந்த ஆண்டு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாத அமைப்பினர் சுதந்திரமாக சுற்றி வருவதாகவும், பயங்கரவாத அமைப்புகள் முழுமையாக அளிக்கப்படவில்லை என்ற செய்தி கவலை தருவதாக உள்ளது என உள்ளூர் மக்கள்  கூறுகின்றனர்.
Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram