கிரிக்கெட் : இந்தியாவின் முக்கிய தவிர்க்க முடியாத வீரரான விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2025 ஆம் ஆண்டுக்கான இறுதி போட்டி நாளை இந்தியா மற்றும் நியூசிலாந்து இரு அணிகளிடையே நடைபெற உள்ளது. இந்த ரசிகர்களிடையே இந்த போட்டியின் எதிர்பார்ப்பு என்பது உச்சத்தில் உள்ளது எனவே கூறலாம் இரு அணியில் எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது என ரசிகர்கள் காத்திருக்கின்றன
இந்நிலையில் இந்திய அணி மற்றும் நியூசிலாந்து இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கான கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் இரு அணிகளுமே அணியில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்களைக் கொண்டு ப்ளேயிங் லெவனில் ஆட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது இந்திய அணி சுழற்சிளர்களை எதிர்கொள்ள தீவிரப் பயிற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்திய அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் தகவலும் ஒன்று வெளியாகி உள்ளது. இந்திய அணியின் முக்கிய வீரரான விராட் கோலி பயிற்சியில் ஈடுபட்டபோது அவருக்கு பந்து காலில் பட்டு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது காயம் ஏற்பட்ட விராட் கோலி வழியால் துடித்ததாகவும் அவருக்கு மருத்துவ உதவி செய்து பேண்டேஜ் போட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த செய்தி இந்திய அணி ரசிகர்களை மிகவும் சோகத்திற்கு உள்ளாக்கி உள்ளது இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், மிகப்பெரிய காயம் ஒன்றுமில்லை அவர் நிச்சயம் இறுதிப் போட்டியில் கலந்து கொள்வார் நாளை ஒரு நாள் முழுவதும் நேரம் உள்ளது அவர் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார் அதனால் இறுதிப் போட்டியில் அவர் நிச்சயம் விளையாடுவார் என்று கூறியுள்ளனர்.