தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமீபத்தில் அவரது வாழ்க்கை குறித்து ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்துள்ளார். பொதுவாகவே அரசியலில் இருப்பவர்கள் சினிமா வாழ்க்கையோடு தொடர்பு உள்ளவர்களாக பெரும்பாலும் இருப்பார்கள். எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், தற்சமயம் விஜய் ஆகியோர் சினிமா பின்புலம் உள்ளவர்கள். உதயநிதி ஸ்டாலின் ஆரம்பத்தில் தயாரிப்பாளராக அறிமுகமாகி, அதன் பின்னர் நடிகராக உருவெடுத்து, தற்சமயம் துணை முதலமைச்சர் ஆக செயல்பட்டு வருகிறார். அதேபோல் அன்பில் மகேஷ் அவர்களும் ஆரம்ப காலகட்டத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி இருக்கும் சீரியலில் நடித்துள்ளார்.
சன் டிவியில் கடந்த 2004 ஆம் ஆண்டில் அகல்யா என்ற சீரியலில் இவர் நடித்துள்ளார். அவர் அந்த சீரியலில் அவ்வப்போது ஒரு வீல் சேரில் அமர்ந்து வலம் வந்து கொண்டிருப்பாராம். அந்த நாடகப் பாடலுக்கு டி.இமான் தான் இசை அமைத்துள்ளார். அந்த பாட்டில் அவர் அவ்வப்போது வரும் வீல் சேர் உலா காட்சிகள் அதிகமாக இடம்பெற்றிருக்குமாம். அவர் அந்த நாடகத்தில் பெருமளவு நடிக்கவில்லை என்றாலும் இவரது காட்சிகள் அதிகமாக பாடலில் இடம் பெற்றுள்ளது.
அவர் அந்த நாடகத்திற்கு எப்பவாவது தான் நடித்துள்ளார் என்றுள்ள தயாநிதி மாறன். அவர் உங்கள் நண்பர் என்பதால், அவரது காட்சிகள் நாடகத் தொடக்க பாடலில் அதிகமாக இடம்பெற்றுள்ளதா! என்று அவர் அடிக்கடி கேள்வி எழுப்பியுள்ளார். இதனை சமீபத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். இது தற்சமயம் பெரும்பாலும் பத்திரப்பட்டு வருகிறது.