அன்புமணி எந்த வகையிலும் என் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று ராமதாஸ் கோபத்தின் உச்சியில் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக இவர்களது பிரச்சனை பெரும் பூகம்பமாக வெடித்து வருகிறது. இதன் உச்சகட்டமாக அப்பாவின் பெயரையே மகன் உபயோகிக்க கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர். சமீபத்தில் பாமக சார்பில் செயற்குழு நடந்து முடிந்ததை அடுத்து பொதுக்குழு இன்று நடைபெற்று வருகிறது. செயற்குழு தீர்மானத்தில் தலைவராகிய அன்புமணி இல்லாததால் அது செல்லுபடி ஆகாது என்று அன்புமணி தெரிவித்து இருந்தார்.
அதனை சிறிதும் பொறுப்படுத்தாது அவர் வேட்பாளர்கள் நியமிப்பது அடுத்ததாக தற்போது பொதுக்குழு கூட்டம் நடத்தி வருவது ஆகியவற்றை முன்னெடுத்து செய்து வருகிறார் ராமதாஸ். அவர் இன்று பொதுக்குழு கூட்டத்தில் பேசிய போது, அன்புமணி எந்த வகையிலும் அவர் பெயருக்கு பின்னால் என் பெயரை சேர்க்கக்கூடாது. வேண்டுமென்றால் இன்சியலாக என் பெயரை பயன்படுத்தி கொள்ளலாம். அதை விடுத்து என் பெயரை வைத்து அரசியல் செய்வது கூடவே கூடாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.


