சென்னை: பாமக தலைவர் அன்புமணி பாமக கட்சியின் பரப்புரை பாடலை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சமூக நீதிக்கு எதிராக திமுக அரசை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் மக்களின் துயரங்களை துடைக்காமல் விளம்பரத்திற்காக மட்டுமே செயல்பட்டு வரும் திமுக அரசுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவும் என தெரிவித்துள்ளார்.
அதன்படி விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை, வன்முறை இல்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, சமூக நீதிக்கான உரிமை, நல்லாட்சி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான உரிமை, மது போதைப் பொருட்களால் பாதிக்கப்படாமல் இருக்க உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, ஆரோக்கியமான சுற்றுச் சூழலுக்கான உரிமை மற்றும் நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை ஆகிய 10 வகையான அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்க அன்புமணி ராமதாஸ் இன்று தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற தலைப்பில் நடை பயணம் மேற்கொள்கிறார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் இருந்து தொடங்கி தருமபுரியில் நிறைவடைய உள்ளது. மேலும், உரிமை பயணம் என்ற பாடலையும் வெளியிட்டுள்ளார்.
“பயணம் பயணம் உரிமைப் பயணம்
பெறுவோம் பெறுவோம் புறப்படுடா
அண்ணன் அக்கா தம்பி தங்கை வரணும்
அழைப்பது நம்ம அன்புமணிடா
நெருப்பாய் இருப்போமே வா வா
தடையை உடைத்து தகர்ப்போமே நீ வா
மக்கள் படும் துயரினை போக்கிட
அடிப்படை உரிமைகள் பெற்றிட
திமுக ஆட்சியை விரட்டிட
திரளுது அன்புமணி போர்படையே” என்று தொடங்கும் பரப்புரை பாடலை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.