இப்படி ஒரு கூட்டத்தை பார்த்ததே இல்லை!! மலேசியாவை பார்த்து வியந்த அனிருத்!! தளபதி பற்றி பேசிய சீக்ரெட் என்ன??

Anirudh speech Janayagan Audio Launch Malaysia

தளபதி விஜய் – அனிருத் கூட்டணி என்றாலே அது ‘சார்ட் பஸ்டர்’ தான் என்பது மீண்டும் ஒருமுறை ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் நிரூபணமாகியுள்ளது. மலேசியாவில் திரண்டிருந்த லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் பேசிய அனிருத், விஜய்யுடனான தனது திரைப் பயணத்தை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.

அனிருத்தின் எமோஷனல் பேச்சு: மேடையில் மைக்கை பிடித்த அனிருத், “நிறைய ஊர்களில், நிறைய நாடுகளில் நான் இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன். ஆனால், இந்த புக்கிட் ஜலீல் மைதானத்தில் நான் உணரும் இந்த ‘எனர்ஜி’யை இதுவரை எந்த ஒரு கான்செர்ட்டிலும் பார்த்ததில்லை. இது முற்றிலும் வேற லெவல்!” என தனது பேச்சைத் தொடங்கினார்.

‘கத்தி’ கொடுத்த வாழ்க்கை: தனது ஆரம்பகால திரைப்பயணம் குறித்துப் பேசிய அவர், “எனக்கு அப்போது வெறும் 21 வயது தான். நான் வளர்ந்து வரும் ஒரு இசையமைப்பாளராக இருந்தபோது, என் மீது நம்பிக்கை வைத்து ‘கத்தி’ போன்ற ஒரு மிகப்பெரிய படத்தை எனக்குக் கொடுத்தார் விஜய் சார். அந்த ஒரு வாய்ப்பு தான் எனது வாழ்க்கையையே மாற்றியது. அதன் பிறகு அவருடன் பணியாற்றிய அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. இன்று ‘ஜனநாயகன்’ படத்தில் மீண்டும் அவருடன் இணைந்திருப்பது பெருமையாக இருக்கிறது” என்று உணர்ச்சிப்பொங்க பேசினார்.

விஜய்யின் ரியாக்‌ஷன்: அனிருத் இதைப் பேசிக் கொண்டிருக்கும்போது, கீழே அமர்ந்திருந்த விஜய் புன்னகையுடன் அவரைப் பார்த்து கைகாட்டியது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. “தளபதி கச்சேரி” பாடலுக்கு அனிருத் மேடையில் ஆடிக்கொண்டே பாட, விஜய்யும் அவருடன் இணைந்து ஸ்டெப் போட்டது விழாவின் ‘ஹைலைட்’ தருணமாக அமைந்தது.

விஜய் – அனிருத் இடையேயான இந்தத் தொடர் வெற்றிப் பயணம் ‘ஜனநாயகன்’ படத்திலும் தொடரும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அனிருத்தின் இந்த ஸ்பீச் இப்போது சமூக வலைதளங்களில் ‘ட்விட்டர் ட்ரெண்டிங்கில்’ முதலிடத்தில் உள்ளது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram