மார்ச் பத்து நேற்று இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று இருந்தது. அந்த சபையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தன்னை முன்பு சந்தித்திருந்த திமுக எம்பிக்கள் புதிய தேசிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்குமாறு முன்வந்து இருந்தனர். அதன் பிறகு அதனை எதிர்த்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். திமுகவினர் என்றும் நாகரிகம் அற்றவர்கள் என்று கூறியுள்ளார். இதனை வன்மையாக எதிர்த்த திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி அவரை எதிர்த்து உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப் போவதாக கூறியிருந்தார். அதற்கு எதிராக தமிழக முதலமைச்சர் முதல் சில திமுக அமைச்சர்களும் கண்டனம் தெரிவித்து வந்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து தற்சமயம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதட்டத்தில் பிதற்றும் தமிழக முதல்வருக்கு மூன்று கேள்விகள் என்று அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, திமுகவினர் நேர்மையற்ற நாகரிகம் அற்றவர்கள் என்று தர்மேந்திர பிரதான் கூறியதில் என்ன குறை கண்டு உள்ளீர்கள்? என்ற முதல் கேள்வியும், மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப செயல்படுகிறோம் என்கிறீர்களே!
யார் அந்த மக்கள்? உங்கள் மகன், மருமகள், மகள் மற்றும் தனியார் CBSE பள்ளி வைத்து நடத்தும் உங்கள் உறவினர்களா? என்ற இரண்டாவது கேள்வியும், ஏழை எளிய மாணவர்களின் படிப்பில் அரசியல் செய்யும் நீங்கள் சூப்பர் முதலமைச்சரா? என்ற மூன்றாவது கேள்வியும் தமிழக முதல்வரை நோக்கி அடுக்கியுள்ளார். தமிழ்நாட்டு மக்களின் இடையே உங்களது சாயம் வெளுத்து விட்டது. இனியும் அவர்களை ஏமாற்ற முடியாது என்றவாறு பதிவை வெளியிட்டுள்ளார். இது தற்சமயம் பெரும் பேசும் பொருளாக மாறி உள்ளது.