IPL : ஐபிஎல் போட்டி வருகிற மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில் டெல்லி அணியின் ஆலோசகராக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மகளிர் காண ஐபிஎல் தொடர் எனப்படும் WPL தற்போது பிப்ரவரி 14 தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்தபடியாக 2025 ஆம் ஆண்டுக்கான ஆடவருக்கான ஐபிஎல் போட்டியானது மார்ச் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ஐபிஎல் போட்டிக்கான ரசிகர்கள் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களாலும் அதிகம் ஈர்க்கப்பட்ட ஒரு தொடராகும். பலரும் எதிர்பார்க்கப்படும் இந்த ஐபிஎல் மார்ச் 22 முதல் போட்டியில் விளையாட உள்ளது.
இந்நிலையில் டெல்லி அணி ரசிகர்களுக்காக ஒரு சந்தோஷமான செய்தி வந்துள்ளது. டெல்லி அணியில் இந்த முறை புதிய முக்கிய வீரர்களாக கேஎல் ராகுல், டூப்ளசிஸ், நடராஜன், மிட்சில் ஸ்டார்க், ஹாரி ப்ரூக் என பெரிய நட்சத்திர வீரர்களை ஏலத்தில் எடுத்து டெல்லி ரசிகர்களை குஷிப்படுத்திய டெல்லி அணி நிர்வாகம்.
மேலும் டெல்லி அணியின் புதிய கேப்டன் யார் என்று ஒரு குழப்பம் நிலவிவரும் நிலையில் டூப்ளசிஸ், கே எல் ராகுல் மற்றும் அக்சர் பட்டேல் இந்த மூன்று வீரர்களில் யார் கேப்டன் என்ற குழப்பம் தற்போது நிலை வருகிறது. இதுவரை யார் கேப்டன் என்று முடிவு எட்டப்படவில்லை. மேலும் டெல்லி பயிற்சியாளராக ஹேமங் பதானி நியமிக்கப்பட்டார்.
தற்போது டெல்லியில் ஆலோசகராக இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர் சென்னை தற்போது நியமித்துள்ளனர். இவர் இதற்கு முன் டெல்லி அணியின் கேப்டனாக விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து அவர் பேசுகையில் டெல்லி அணி இதுவரை கோப்பை வெல்லாத நிலையில் தற்போது முதல் கோப்பையை வெல்ல நான் உறுதுணையாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார்.