கூகுள் பிளே ஸ்டோர் நிறுவனம் ஆனது தங்களுடைய பயனர்களின் தரவுகளை திருடக்கூடிய 300 ஆப்களை google பிளே ஸ்டோரை விட்டு நீக்கி இருக்கிறது
இந்த செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்ட செல்போன்களிலிருந்து தகவல்களை திருடியதோடு மட்டுமல்லாது இந்த செயலிகள் Vapor எனப்படும் மிகப்பெரிய மோசடி செயலியாகவும் கருதப்படுகிறது. இதிலிருந்து பயனரின் தகவல்கள் திருடப்படுவதோடு கிரெடிட் கார்டு போன்றவற்றின் விவரங்களும் திருடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனார்களின் தகவல்களை திருடிய செயலிகளின் வகைகள் :-
✓ உடல்நல செயலிகள்
✓ கண்காணிப்பு செயலிகள்
✓ QR செயலிகள்
✓ வால்பேப்பர் செயலிகள்
இவை பதிவிறக்கம் செய்யப்பட்டவுடன் பயனர்களின் தகவல்களை அவர்களின் ஒப்புதல் இல்லாமலே திருடன் தொடங்கி விடுகின்றன. இவை போன்ற செயல்கள்தான் அதிக அளவில் பதிவிறக்கம் செய்யப்படுவதாகவும் இவை தங்களுடைய பெயர்களை மாற்றி விளம்பரங்கள் செய்யப்பட்டு பயனர்களை கவர்வதாகவும் சைபர் கிரைம் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Google பிளே ஸ்டோரில் ஒரு ஆப்பை டவுன்லோடு செய்ய வேண்டும் என்றால் அதனுடைய முழு தரவுகளையும் படித்த பின்பு பதிவிறக்கம் செய்யும்படியும் தேவையற்ற செயலைகளை உடனடியாக உங்களுடைய செல்போன் பயன்பாட்டில் இருந்து நீக்கிவிடும் படியும் அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.