சினிமா : ஏ ஆர் முருகதாஸ் சல்மான்கான் வைத்து இயக்கும் திரைப்படம் சிக்கந்தர் இந்த திரைப்படம் தளபதி விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படத்தின் ரீமேக் என கூறப்பட்டு வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஏ ஆர் முருகதாஸ்.
தமிழில் ஒரு காலத்தில் டாப் இயக்குனர்களில் வலம் வந்தவர் ஏ ஆர் முருகதாஸ். அவர் சிறிது காலம் திரைப்படங்கள் இயக்காமல் இருந்த நிலையில் தற்போது ஒரே நேரத்தில் தமிழில் சிவகார்த்திகேயனின் மதராசி மற்றும் இந்திய சல்மான் கானின் சிக்கந்தர் ஆகிய இரு படங்களையும் உருவாக்கி வருகிறார் இதில் இப்போது சிக்கந்தர் படம் ரம்ஜான் ஸ்பெஷல் ஆக மார்ச் 28ஆம் தேதி ரிலீஸ் என்பதால் பிசியாக அந்த வேலைகளில் மூழ்கி இருக்கிறார்.
ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய சிக்கந்தர் படம் முருகதாஸ் விஜய் நடிப்பில் இயக்கிய சர்க்கார் படத்தின் இந்தி ரீமேக் என ஒரு தகவல் பரவியது. சர்க்கார் மற்றும் சிக்கந்தர் டீசர்களில் ஒற்றுமை உள்ளது என்பதாக ஒரு வீடியோவும் எடிட் செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் உலாவி எது தற்போது இது குறித்து பதில் அளித்திருக்கிறார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இது முற்றிலும் ஒரிஜினலான கதை சிக்கந்தரின் ஒவ்வொரு சீனும் ஒவ்வொரு பிரேமும் புதிய கதை சொல்லலையும் அனுபவத்தையும் அளிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிக்கந்தர் இதற்கு முன்பு வந்த எந்த படத்தின் தழும்பலோ அல்லது ரீமேக்கோ அல்ல என தெரிவித்துள்ளார்.சென்ற வருடம் சல்மான் கான் சில படங்களில் டெஸ்ட் ரோலில் நடித்த படங்கள் மட்டுமே வெளி ஆக்கின அவர் லீட் ரோலில் நடித்து எந்த படமும் வெளியாகவில்லை எனவே இந்த சிக்கந்தர் சல்மான் கானின் கம்பன் படமாக இருக்கும் என காத்திருக்கின்றனர்.